பக்கம்:பௌத்த தருமம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

பெளத்த தருமம்



ஊழே முன்வந்து நிற்கும்' என்ற பொருளில் வள்ளுவர் கூறியுள்ள குறள் வருமாறு:

ஊழிற் பெருவலி யாவுள? மற்றொன்று

சூழினும் தான் முந் துறும்.'

'சோர்வே யில்லாமல் இடையறாத முயற்சியுடையவர் தம்மைத் தடுத்து நிற்கும் ஊழையும் வெற்றி கொள்வர்' என்ற கருத்தில் வள்ளுவர் கூறியுள்ள குறள் இந்தக் கருமப் பயனை ஒட்டி நிற்பது:

'ஊழையும் உப்பக்கம்* காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்று பவர்.'

வாழ்வில் ஒரு பகுதியிலேதான் பழைய ஊழின் ஆதிக்கியமுள்ளது; மறு பகுதியில் புதிய ஊழ் நம்மாலேயே உண்டாக்கப்படுகின்றது.

கரும நியதியைப் பற்றிப் புத்தகோஷர் தமது 'விசுத்தி மார்க்கம்' என்ற நூலில் தெளிவாக விளக்கியுள்ளார். அவர் கூறுவதாவது:

'கருமப் பயனைக் காரணமாகக் கொண்டு முந்திய பிறப்பிலே கந்தங்களின் தொகுதி ஒன்றுசேர்ந்து வாழ்க்கை எற்பட்டது; அந்தக்கந்தங்கள் அந்தப் பிறப்பிலேயே அழிந்து போய்விட்டன. முந்திய பிறப்பின் கருமம் காரணமாக இந்தப் பிறப்பில் வேறு கந்தங்களின் தொகுதி சேர்ந்து வாழ்க்கை ஏற்பட்டுளது. முந்திய பிறப்பிலிருந்த மூல


  • உப்பக்கம்-முதுகு; மற்போரில் மல்லரை முதுகு மண்ணில் தோயும்படி வீழ்த்தி வெற்றி கொள்ளலைக் குறிக்கும்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/135&oldid=1386913" இலிருந்து மீள்விக்கப்பட்டது