பக்கம்:பௌத்த தருமம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிப்படைக் கொள்கைகள் 181 காதுக்களில் எதுவும் இக்கப் பிறப்பில் சோவில்லை (இக் கப் பிறப்பில் புலன்கள், பொறிகள். உடல் ஆகியவற்றின் அமைப்புக்கு அவை காரணமாக மட்டும் இருக்தன). முக்கிய கருமம், இந்தப் பிறப்பில் சேர்ந்துள்ள கந்தங்கள் யாவும் இதிலேயே அழிந்துபோகக் கூடியவை; அடுத்த பிறப்பில் வேறு சக்தங்கள் சேர்ந்து கொள்ளும்; ஆளுல் இப்பிறப்பி லுள்ள சேர்க்கைகளில் எதுவும் அடுத்த பிறப்புக்குப் போவ கில்லை. ஒரு குரு தமது சீடனுக்கு உபதேசம் செய்கிருர் என்ருல், அவர் அவனுடைய வாய்க்குள் போய் அமர்ந்து கொள்வதில்லை; ஆயினும் சீடன் அவர் போதித்தவைகளைத் தன் வாயால் திரும்பச் சொல்கிருன். ஒருவனுடைய முகத் தின் அமைப்புக்கள் யாவும் கண்ணுடியில் தெரிகின்றன. ஆயினும் அந்த அமைப்புக்கள் தாமே கண்ணுடிக்குள் போய் அமைந்திருக்கவில்லை; எனினும் முகத்தின் அமைப்புக்கள் காரணமாகவே பிரதிபிம்பத்தின் தோற்றங்களும் அமை கின்றன. ஒரு விளக்கின் கிரியிலுள்ள சுடரிலிருந்து மற்ருெரு விளக்கைப் பொருத்தும் பொழுது, முதல் விளக்கின் சுடரே அடுத்த விளக்குக்குப் போவதில்லை; ஆயினும் அதுவே பிக்கிய சுடர் எரிவதற்குக் காரணமா யிருக்கின்றது. இவைகளைப் போலவே முக்திய பிறப்பி லிருந்த கந்தத் தொகுதிகளில் எதுவும் இந்தப் பிறப்பில் வருவதில்லை, இதற்குப் பின் வரும் பிறப்பிலும் இப்போ அள்ள கந்தத் தொகுதிகள் செல்லப் போவதில்லை. ஆயினும் முந்திய பிறப்பிலிருந்த கந்தத் தொகுதிகள், பொறிகள், புலன்கள், புலன்களின் உணர்வு, பிாக்ஞை ஆகியவைகளை ஆதாரமாகக் கொண்டே அடுத்த பிறப்புக்குரிய கந்தத் தொகுதிகள், பொறிகள். புலன்கள். புலன்களின் உணர்வு, பிரக்ஞை ஆகியவைகள் தோன்றும்.’ வினைப் பயன்கள் எப்படி மனிதனைப் பாதிக் கின்றன என்பதை இவ்வாக்கியங்கள் சுருங்கச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/136&oldid=848891" இலிருந்து மீள்விக்கப்பட்டது