பக்கம்:பௌத்த தருமம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 பஞ்ச "லங்கள் - கொல்லாமை, திருடாமை, மு ைற த. வ றி ய நற்றின்பம் விலக்கல், பொய்யாமை, இலாகிரிப் பொருள்களை விலக்கல் ஆகிய ஐந்து ஒழுக்கங்கள். பெளத்தசங்கத்தில் சேருவோர், புத்தர், தருமம், சங்கம் ஆகிய மூன்று சரணங்களையும் மும்மு றை கூறி, இந்த விரதங்களை மேற்கொள்ள வேண்டும். படிச்ச சமுப்பாதம் பிரதித்ய சமுத்பாதம் பார்க்கவும். பதம்- வழி, மார்க்கம். பமாதம் - மடிமை, அசிரத்தை மனிதன் மடிமையில் வீழ்ந்துவிடக் கூடாதென்று புத்தர் வாழ்நாள்முழுதும் உபதேசித்துக் கொண்டே யிருந்தார் : "பமாதோ மச்சுநோ பதம் - மடிமையே மரணத்திற்கு வழி.' இ த ற் கு எதிரான மொழி அப்பமாதம் - கருத் துடைமை, |டைவிடாத முயற்சியுடன் கூடிய சிரத்தை, பரி நிருவானம் - நிருவாணமடைந்து வாழ்வு முற்றுப் பெறுதல். பலங்கள் - சிரத்தை, வீரியம், ஸ்தி, சமாதி, பிரஞ்ஞை என்ற ஐந்து ஆற்றல்கள். பற்று - உபாதானம். பன்ன - (பன்ஹா) கேள்வி. பன்னிரு நிதானங்கள்-பேதைமை, செய்கை உணர்ச்சி, அருவுரு, வாயில், ஊறு, நுகர்ச்சி, வேட்கை, பற்று, கருமத்தொகுதி, தோற்றம், வினைப்பயன் இ.ே 12-சார்புகள். - பாதி மொக்கம் - பிராதி மோட்சம். பாரமிதைகள் - தானம், சீலம், பொறுமை, வீரியம், தியானம், பிரக்ஞை உபாயம், தயை, பலம், ஞானம் ஆகிய பத்து. பாவனை - மன, மொழி, மெய்களால் உண்டாகும் | வினைகள். | பிக்கு - பெளத்தத் துறவி. பிக்குனி - டிை பெண்பால். பிடகம் - பெட்டி, கூடை பிரஞ்ஞை - சமாதியின் பயனகப் பேரறிவு பெற்ற நிலை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/15&oldid=848923" இலிருந்து மீள்விக்கப்பட்டது