பக்கம்:பௌத்த தருமம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

பெளத்த தருமம்


புத்தர் - அது போலவே மனிதனுக்கு அவா உண்டாக்கும் ஐங்து தளைகள் இருக்கின்றன; அவைகள் சங்கிலிகள், விலங்குகளாக இருக்கின்றன. அவை கண்ணால் காண்பவை, காதால் கேட்பவை, நாசியால் முகர்பவை, நாவினால் சுவைப்பவை, உடலால் உணர்பவை ஆகியவை. அவாவுக்குக் காரணமான இந்த ஐங்திலும் பிராமணர்கள் பற்றுக் கொண்டிருக்கிறார்கள், அவைகளில் திளைத்து மயங்குகிறார்கள், அவைகளால் வரக்கூடிய அபாயத்தை அறியாமல், அவைகளைத் துய்த்து இன்பம் காண்கிறார்கள். அவர்கள் மரணத்திற்குப் பின்னல் பிருமத்திடம் ஐக்கியமாதல் எங்ங்னம் முடியும்? அது உலகில் சாத்தியமில்லை.

மேலும் ஒரு மனிதன் மறுகரைக்குச் செல்லவேண்டும் என்ற கருத்துடன், தன் தலை உட்படப் போர்வையால் போர்த்திக்கொண்டு அசிரவதியின் இக்கரையிலே உறங்குவதற்காகப் படுத்து விட்டால், அவன் அக்கரையை அடைய முடியுமா?

வசிட்டன் - நிச்சயமாக முடியாது !

புத்தர் - அது போலவே மனிதர் கண்களை மறைக்கும் திரைகள், தடைகள், ஐந்து இருக்கின்றன. அவை அவா, துவேஷம், மடிமை, செருக்கு, சந்தேகம் என்பவை. இங்த ஐந்து திரைகளாலும் பிராமணர்கள் மூடப் பெறுகிறார்கள், தடைசெய்யப் பெறுகிறார்கள்; அவர்கள் இவைகளிலே சிக்கி விடுகிறார்கள்.

அவசியமான ஒழுக்கங்களைப் பேணாமல், ஐங்து விலங்குகளையும் மாட்டிக் கொண்டு, ஐங்து திரைகளாலும் மூடப் பெற்று, பிராமணர்கள் மரணத்திற்குப் பின்னால் பிருமத்துடன் ஐக்கியமாகி விடலாம் என்பது எங்ஙனம் முடியும்? உலகில் அது சாத்தியமில்லை.

வசிட்டா! பிராமணர்களிலே ஆசிரியர்களும் மாணவர்களும் பேசும் போதும், வயது முதிர்ந்த பெரியவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/171&oldid=1386801" இலிருந்து மீள்விக்கப்பட்டது