பக்கம்:பௌத்த தருமம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

பௌத்த தருமம்


வசிட்டன் - இல்லை.

புத்தர் - பிராமணர்கள் மனைவிமார்களையும் செல்வங்களையும் பெற்றிருக்கிறார்கள்; ஆனால் பிருமம் பெற்றிருக்கவில்லை. ஆகவே, பிராமணர்களுக்கும் பிருமத்திற்கும் ஒற்றுமையோ, ஐக்கியமோ ஏற்பட முடியுமா?

வசிட்டன் - நிச்சயமாக முடியாது.

புத்தர் - உலகில் அது சாத்தியமில்லை.

பிராமணர்கள் உள்ளங்களில் கோபம், துவேஷம் ஆகியவைகளைப் பெற்றிருக்கிறார்கள், பாவமுடையவர்களாகவும், புலனடக்கமில்லாதவர்களாகவும் இருக்கிறார்கள். பிருமம் கோபமற்றும், துவேஷமற்றும், பாவமற்றும், தன்னடக்கமுள்ளதாயும் விளங்குவது. எனவே பிராமணர்களுக்கும் பிருமத்திற்கும் ஒற்றுமையோ, ஐக்கியமோ எப்படி ஏற்பட முடியும்?

வசிட்டன் - நிச்சயமாக முடியாது!

புத்தர் - உலகில் அது சாத்தியமில்லை.

ஆகவே பிராமணர்கள் மூன்று வேதங்களையும் கற்றுணர்ந்திருப்பினும், அவர்கள் (நம்பிக்கையோடு) அமரும் பொழுது, (சேற்றில்) ஆழ்வதுபோலக் கீழே ஆழ்ந்து விடுகிறார்கள்; அப்படி ஆழ்ந்து, எங்கோ இன்பகரமான இடத்திற்குச் செல்வதுபோல எண்ணிக்கொண்டு, அவர்கள் நம்பிக்கையையே இழந்துவிடுகிறார்கள்.

இதனால் தான் மூன்று வேதங்களையும் கற்றுணர்ந்த அவர்களுடைய மூவகை ஞானமும் நீரில்லாத பாலை என்றும், வழியேயில்லாத வனம் என்றும், அழிவுநிலை என்றும் கூறப்படுகின்றது.

வசிட்டன் - சிரமண கெளதமருக்கு (தங்களுக்கு)ப் பிருமத்தை அடையும் மார்க்கம் தெரியுமென்று சொல்லப் படுகின்றது......

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/173&oldid=1386826" இலிருந்து மீள்விக்கப்பட்டது