பக்கம்:பௌத்த தருமம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெளத்தமும் சாதிப் பிரிவினையும்

171



அவன் எவரையும் காயப்படுத்துவதில்லை, வதை செய்வதில்லை, பந்தனப் படுத்துவதில்லை; வழிப்பறி செய்வதில்லை, கிராமங்களைச் சூறையிடுவதில்லை, பலாத்காரத்தால் பயமுறுத்திப் பணம் பறிப்பது மில்லை.

இதுவும் அவனது மேன்மைக் குணமாகும்.

பிக்குகளும் பிராமணர்களும்

இதற்குப் பின்னால் புத்தர் பெருமான் பிக்கு தருமத்தை மேற்கொண்டவனுக்கும் பிராமணர்களுக்குமுள்ள வேற்றுமைகளை விரிவாக எடுத்துரைத்தார். சில பிராமணர்கள் இறைச்சி,பானவகைகள், உடைகள், படுக்கைகள், வாசனைத் திரவியங்கள், தானியங்கள் முதலியவைகளைச் சேர்த்து வைத்துக் கொள்வதும், நாட்டியம், பாட்டு, கூத்துக்கள் முதலியவைகளைக் கண்டும் கேட்டும் இன்புறுவதும், யானைச் சண்டை, குதிரைச் சண்டை, மாட்டுச் சண்டை , சிலம்பம், குஸ்தி முதலியவைகளில் ஈடுபடுவதும், சதுரங்கம், சூது, பந்தயங்கள் முதலிய ஆட்டங்கள் ஆடுவதும், ஆடம்பரமான கட்டில்கள், கம்பளத்தால் செய்த உயர்ந்த போர்வைகள், சரிகை வேலைப்பாடுள்ள தலையணைகள் அல்லது மெத்தைகள், புலித்தோல், மான்தோல் முதலியவற்றை உபயோகிப்பதும் வழக்கமாயிருக்கையில், பிக்கு அவை அனைத்தையும் விலக்கிவிடுகிறான் என்று அவர் கூறினார். சிலபிராமணர்கள் அரசர்கள், கொள்ளைக்காரர்கள், மந்திரிகள் முதலியோரைப் பற்றியும், அற்பமான துணிகள், உணவு முதலிய உலகப் பொருள்களைப் பற்றியும், சோதிடம், புதையல்கள் முதலியவை பற்றியும் உண்மையும் பொய்யுமான கதைகளைக் கூறி வீண் பேச்சில் ஈடுபடுவதைப்போல் பிக்கு ஈடுபடுவதில்லை என்றும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/178&oldid=1386837" இலிருந்து மீள்விக்கப்பட்டது