பக்கம்:பௌத்த தருமம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரும் இயல் பெளத்த சங்கம் இருமை வகைதெரிந்து ஈண்டு.அறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு." - திருக்குறள் STTTTTTSSTTTTTS TTTT TTTTTTS TTTTTTTTTT TTTTTTS புத்தர், தருமம், சங்கம் ஆகிய மும்மணிகளையும் பெளத்தர்கள் சரணங்களாகக் கொள் வர் . உலகிற்கு ஒளியளித்து வழிகாட்டியவர் புத்தர், அவர் போதனை தருமம், அப்போதனையை ஏற்றுக் கொண்ட துறவிகளான பிக்குகளின் கூட்டம் சங்கம். புத்தர் மெய்ஞ்ஞானம் பெற்றதும், தரும உபதேசம் செய்ததும் உலக சரித்திரத்திலே மாபெரும் நிகழ்ச்சி களாம். ஆனல் அவருடைய தருமம் உலகிலே இருபத்தைந்து நூற்ருண்டுகளுக்கு மேலாக நிலத்து நிற்பதற்கும், கோடிக்கணக்கான மக்கள் அதனைrச் சார்ந்து மனச் சாந்தி பெறுவதற்கும் காரணமாக நின்றது சங்கமேயாகும். பொறிகளையும், புலன்களையும் அடக்கி உயர்ந்த ஒழுக்க முறைகளான சீலங்களைக் கைக்கொண்டு, உலகப் பொருள்களிலே பற்றற்று, ஞானத்தாலும், தியானத்தாலும், அன்பாலும், அருளாலும் மேம் பாடுற்று விளங்கிய பிக்குகளின் பெருமையை அளவிட்டுரைக்க மு டி யாது. நீத்தார்களின் பெருமைக்கு அவர்கள் எடுத்துக்காட்டாக விளங்கி ர்ைகள். அத்தகையோர் ஒரே திருக்கூட்டமாக ஒன்றுசேர்ந்து விளங்கியதே சங்கமாக நிலத்து நிற்கின்றது. கால வெள்ளத்திலே இராஜ்யங்கள் மாறிலுைம், மன்னர்கள் மாறிலுைம், இச்சங்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/181&oldid=848991" இலிருந்து மீள்விக்கப்பட்டது