பக்கம்:பௌத்த தருமம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206

பெளத்த தருமம்


களிப்பு, உலகம், ஆன்மா, நிலையாமை, முதுமை, கருமம், கருத்துடைமை, சிந்தனை, தியானம், நட்பு, அன்பு முதலிய பல விஷயங்களைப் பற்றியும் சுருக்கமாகவும் பொருட் செறிவுடனும் எடுத்துக் கூறுகின்றன.

உதாநம் : இதில் 8 வக்கங்களில் புத்தருடைய விசேடமான 80 உதாநங்கள் என்ற கட்டுரைகள் இருக்கின்றன. உதாநம் என்பதற்கு ‘உயிர்க்கப் பெற்றது’ என்று பொருள் கூறுவர் — அதாவது புத்தரால் உயிர்க்கப் பெற்றது — கூறப்பெற்றது என்று பொருள்படும்.

இதி உத்தகம்: உரையும் பாட்டும் கலந்து நான்கு நிபாதங்களில் 112 சிறு சூத்திரங்கள் இதில் அமைந்திருக்கின்றன. புத்தர் ‘இப்படிக் கூறினார்’ என்று குறிப்பதே இதி உத்தகம்.

சுத்த நிபாதம்: இது ஐந்து வக்கங்களுள்ளது. செய்யுளும் வசனமும் இதிலே கலந்து வருகின்றன. புத்தருடைய வரலாற்றுப் பகுதிகள் சிலவற்றை அவரே கூறிய முறையில் இதிலே காணமுடிகின்றது. வேறு பல அரிய விஷயங்களும் இதிலிருப்பதால், இந்த நிபாதம் மிகவும் போற்றப்பெறும் நூலாகும். காசி பாரத்துவாஜர் என்ற அந்தணர் புத்தருக்கு உணவளிக்க மறுக்கையில், பெருமான் தாமும் தொழில் செய்யும் ஓர் உழவர் என்பதை விளக்கிக் கூறுதல் இதிலேயுள்ள சூத்திரமாகும். ‘சுத்த நிபாதம்’ என்பதற்குச் சூத்திரங்களின் தொகுதி என்று பொருள்.

விமான வத்து: இது கரும நியதியை விளக்கு வதற்காக எழுந்த நூல். தேவர்கள் சிலர், முன்னால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/213&oldid=1386883" இலிருந்து மீள்விக்கப்பட்டது