பக்கம்:பௌத்த தருமம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210

பௌத்த தருமம்


8. பிக்குகளின் உடைகள்.

9. சங்கத்தின் அங்கத்தினர்கள் சம்பந்தமான நீதி முறைகள்.

10. சங்கத்திற்கு எதிரான கட்சிகள்.

இவைகளில் இரண்டாவதான பிரிவில் பாதிமொக்கம் மிகவும் முக்கியமானது.[1] இதிலுள்ள விதிகள் 227.

சுள்ள வக்கத்தில் 12 பகுதிகள் இருக்கின்றன. அவை வருமாறு:

1. சாதாரணக் குற்றங்களுக்குரிய நடவடிக்கைகள்.

2. சீர் திருந்துவ தும் கழுவாயும் (பிராயச்சித்தமும்).

3. 

4. சங்க உறுப்பினருள் தோன்றும் மனஸ்தாபங்களைத் தீர்த்து வைத்தல்.

5. பிக்குகளின் தினசரி வாழ்க்கை முறை.

6. வசிக்கும் இடங்களும், அங்கு உபயோகிக்கும் சாமான்களும்.

7. சங்கத்துள் ஏற்படும் தகராறுகள்.

8. பிக்குகளில் ஒருவருக்கொருவர் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்.

9. பாதி-மொக்கக் கூட்டத்திற்கு வராமலிருப்பது பற்றிய நியமங்கள்.

10. பிக்குணிகளின் ஒழுக்க முறைகள்.

11. இராஜகிருகத்தில் நடந்த பிக்குகளின் மகாநாடு.

12. வைசாலியில் நடந்த பிக்குகளின் மகாநாடு.


  1. பாதி-மொக்கம் பற்றி முன் 179-ஆம் பக்கம் பார்க்கவும்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/217&oldid=1386898" இலிருந்து மீள்விக்கப்பட்டது