பக்கம்:பௌத்த தருமம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அஷ்டாங்க மார்க்கம்

51


என்பது உண்மையான பார்வை. சந்தேக மயக்கங்களுடன் பார்த்தல் தீக்காட்சி அல்லது பொய்க் காட்சியாகும். ஒருவன் ஒன்றில் நம்பிக்கை கொள்கிறான் என்றால், அவன் முதலில் அதை நன்கு அறிந்திருக்க வேண்டும். அந்த அறிவை அடித்தலமாகக் கொண்டே, மேற்கோட்டைகளாகிய பேச்சும், செயலும் கட்டப் பெறுகின்றன. அஸ்திபாரமே ஆட்டங் கொடுத்தால் மேற்கோட்டைகளின் கதி என்ன வாகும்?

வாழ்க்கையின் உண்மைகளையும், பிரபஞ்சத்தைப் பற்றிய உண்மைகளையும், பொருள்கள், உயிர்கள், யாவற்றையும் சூழ்ந்து நிற்கும் விதிகளையும் ஆதாரமாகக் கொண்டு அவற்றிற்கு ஏற்றபடி அமைவதே நற்காட்சி–நல்லறிவு.

மனிதன் எதையும் தன் புத்தியைக் கொண்டு அறிந்திருந்தால் போதாது, அதனை அவன் தன் வாழ்க்கையிலேயே அருபவித்தும் உணர்ந்திருக்க வேண்டும்.

பொய்க் காட்சியும், அறியாமையுமே உலகில் நிறைந்துள்ளன. தொட்டில் முதல் சுடுகாடுவரை பொய்களும், போலி உண்மைகளும், மூட நம்பிக்கைகளும், சுயநலங்களும் மனித வாழ்வைச் சூழ்ந்து அரித்துக்கொண்டே யிருக்கின்றன. மக்களின் கண்கள் உண்மையைப் பார்க்கக் கூசுகின்றன. விழித்துப் பார்த்தவுடன் தெள்ளத் தெளிவாகத் தெரியக்கூடிய உண்மையை விட்டுவிட்டு, அவர்கள் போலிகளையே நம்பி வாழ்கின்றனர். இதனால் தடுக்கிவிழும் இடங்களிலெல்லாம் ‘மாடன்’களும் பீடங்களும் நிறைகின்றன; ‘கல்லினும் செம்பிலுமோ இருப்பான் எங்கள் கண்ணுதலே’ என்று பாடிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/56&oldid=1386941" இலிருந்து மீள்விக்கப்பட்டது