பக்கம்:பௌத்த தருமம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஷ்டாங்க மார்க்கம் 63 உயிர்க் கொலையால் கிடைக்கும் ஊனை உண்பது மட்டும் இதுவரை நிற்கவில்லை. எல்லா உயிர்க ளிடத்தும் அன்பு செலுத்துவதாகச் சொல்லிக் கொண்டு, வெளியே திரியும் உயிர்ப் பிராணிகளை வயிற்றுள் அடக்குதல் எந்த முறையில் நியாய மாகுமோ தெரியவில்லை. இத்தகைய நிலைமையை உணர்ந்தே நாயனும், கொல்லாமையைப் பற்றிக் கூறியது போலவே, புலால் மறுத்தலையும் வற். புறுத்திக் கூறியுள்ளார். "தினம் பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும் விலைப் பொருட்டால் ஊன் கருவார் இல்' என்று அவர் எடுத்துக்காட்டியுள்ளார். பலகோடி மக்கள் புலாலுண்பதாலேயே, பிராணிகளை வதைத் தலும், வதைத்தவைகளின் ஊனை விற்றலும் நடை பெறுகின்றன. பெளத்தர்கள் புலாலுண்பதைக் காந்தியடிகளும் கடிந்துள்ளார். உயிர்கள் அனைத்தையும் அன்போடு ஆதரிப்பது பற்றிப் புத்ததேவர் கண்டிப்பான முறையில் உபதேசித்ததைப் பாராட்டிவிட்டு, வெளி நாடுகளிலுள்ள அவர் அடியார்கள் புலால் மறுத் தலை மேற்கொள்ளாம லிருப்பது மு ைற ய ன் று என்பதை அவர் எடுத்துக் காட்டியுள்ளார். அவர் கூறியதாவது: • உலகிலே எந்தச் சமயாசாரியாாவது காரண-காரியத் தொடர்பு பற்றிய அசைக்கமுடியாத விதியை வற்புறுத்திக் கூறினர் என்ருல், அவர் கிச்சயமாகக் கெளதமரேயாவார்; ஆயினும், இந்தியாவுக்கு வெளியேயுள்ள எனது பெளத்த கண்பர்கள், தங்களால் முடிந்தால், தங்கள் செயல்களின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/68&oldid=849195" இலிருந்து மீள்விக்கப்பட்டது