பக்கம்:பௌத்த தருமம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

பௌத்த தருமம்


அல்லது காரணத்தைக் கொண்டே இயங்கிச் கொண்டிருந்தன என்று அவர் கண்டார். உலகில் எல்லாம் காரண — காரியத் தொடர்புகளாகவே இருப்பதை அறிந்து, ஹேதுவை அடிப்படையாகக் கொண்ட தமது தருமத்தை அவர் பிரசாரம் செய்தார்.

‘ யேதர்மா ஹேதுப்ரபாவா:
        தேஷாம் ஹேதும் ததாகத ||
ஆஹதேஷா0 யோநிரோத:
        ஏவம்வா தீ மஹாஸம(ண): ’ [1]

ஒரு காரணத்திலிருந்து நிகழும் காரியங்களைக் கண்டு, அந்தக் காரணத்தைத் ததாகதராகிய புத்தர் கூறியுள்ளார்; அதைத் தடுத்து நிறுத்தும் வழியையும் அந்த மகாசிரமணரே கற்பித்துள்ளார். பிரபஞ்சத்தில் எல்லாமுமே ஹேதுவை அடிப்படையாகக் கொண்டே ஏற்பட்டுள்ளன. ஹேதுவை நீக்கிவிட்டால், ஹேதுவிலிருந்து எழும் தோற்றம் அல்லது பிறப்பையும் ஒழித்து விடலாம். இவ்வாறு புத்தர் உபதேசித்துவந்தார்.

உலகில் எல்லாமுமே கணந்தோறும் மாறி யமைகின்றன. உலகம் சம்பவங்களின் பிரவாகமாகவே இருந்து வருகின்றது; உறுதியாக இங்கே நிலைத்து நிற்கக்கூடிய பொருள்களேயில்லை. நிலையாமையே எல்லாவற்றின் துக்கத்திற்கும் காரணமாயுள்ளது. தோன்றிய தெல்லாம் மாறியே தீரவேண்டும் என்பது உலக நியதியாயுள்ளது. எனவே பிறப்புத்தான் மரணத்தின் காரணம். தோன்றாமலிருக்க வழி கண்டாலொழிய, எதுவும் மாறாமல் இருக்க முடியாது.


  1. ‘போதி மாதவன்’ பக்கம் 212 பார்க்க.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/89&oldid=1387006" இலிருந்து மீள்விக்கப்பட்டது