பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 பத்திரிகை தர்மம். உயர்ந்த பத்திரிகை தர்மத்தை உயர்த்திப் பிடித்தார் பாலர். அதுகண்டு வெகுண்டது வெள்ளை அரசு ஆறு மாத சிறை தண்டனை விதித்தது. விபின சந்திர பாலர் தண்டனையை ஏற்ருர்; சிறை புகுந்தார். ஆறு மாதங்கள் பறந்தோடி விட்டன. சிறை யினின்றும் பாலர் வெளிவரும் நாளும் நெருங்கியது. அந் நாள் எது? 1908-ம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் தேதி. அந்த நன்னளை விடுதலைத் திருநாளாகக் கொண்டாட முடிவு செய்தது திலகரி கட்சி. அதாவது, 1908-ம் ஆண்டு மார்ச்சு மாதம் எட்டாம் தேதி. சென்னையிலே பாரதியார் என்ன செய்தார்? அந்த விடுதலைத் திருநாளைச் சிறப்புடன் கொண்டாட ஏற்பாடுகள் செய்தார். 'சென்னையின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் ஊர்வலங் கள் புறப்பட வேண்டும். திருவல்லிக்கேணி பெல்ஸ் ரோடில் கூட வேண்டும். பைகிராப்ட்ஸ் ரோடு வழியே கடற்கரை செல்ல வேண்டும். கடற்கரையிலே கூடவேண்டும். கூட்டத்திலே சொற்பெருக்காற்ற வேண்டும்." இவ்வாறு ஏற்பாடு செய்தார் பாரதியார். இதன் பொருட்டு மூன்று நாட்கள் முன்னர் தொடங்கி ஏற்பாடுகள் செய்யப்பட்டன. குறித்த நாளில் ஊர்வலமும் புறப்பட்டது. வந்தே மாதரம் முழக்கத்துடன் பாடல்கள் பாடிக் கொண்டு முன்னின்று ஊர்வலத்தை நடத்திச் சென்ருர் பாரதியார். கடற்கரைக் கூட்டமும் இனிது முடிந்தது. தூத்துக்குடியில் என்ன நடந்தது? விடுதலைத் திருநாளைச் சிறப்புடன் கொண்டாட ஏற்பாடுகள் செய் திருத்தார் வ. உ. சிதம்பரம் பிள்ளை,