பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 படி கம்பெனியாரே நிர்வாகம் செய்து வந்தனர். அதே மாதிரி, சென்னையிலிருந்து பம்பாய்க்குப் போகும் ரயில் பாதையை இன்னொரு கம்பெனி நிர்வகித்து வந்தது. இதற்கு, "மதராஸ் அண்டு சதர்ன் மராட்டா ரயில்வே கம்பெனி' என்று பெயர். இந்தமாதிரி பல கம்பெனிகள். இவை எல்லாம் வெள்ளைக்காரர் கம்பெனி களே. இத்தகைய ரயில்வே கம்பெனிகளில் ஒன்றுதான், ஈஸ்ட் இந்தியா ரயில்வே கம்பெனி. அதாவது கிழக்கிந்திய ரயில்வே கம்பெனி. இந்தக் கம்பெனியைச் சேர்ந்த இந்தியத் தொழி லாளிகள் வேலை நிறுத்தம் செய்தார்கள். சூலை மாதத்தில் தொடங்கிய வேலை நிறுத்தம் செப்டம்பர் மாதம்வரை நடந்தது. இந்த வேலை நிறுத்தத்தை முறியடிப்பதற்காக, மேற்படி வெள்ளைக்கார ரயில்வே கம்பெனி பகீரதப் பிரயத் தனம் செய்தது. கிழக்கிந்திய ரயில்வே கம்பெனிக்குத் துணையாக உதவி புரிய விரைந்தன பல்வேறு கம்பெனிகள்: அதாவது கருங்காலிகளை அனுப்ப முயன்றன. இந்த வேலை நிறுத்தத்தை ஆதரித்தார் பாரதியார். கருங்காலி'களாக ஆள் .ே ச ரி த் து அனுப்புவதைக் கண்டித்தார். "ஈஸ்ட் இந்தியா இருப்புப் பாதையில் இந்திய வேலைக்காரர்களுடைய குறைகள் சரியாக மேலதிகாரி அளால் கவனிக்கப்பட்டு நிவர்த்தி செய்யப்படாமல் போன படியால் அந்த இருப்புப் பாதையிலுள்ள இந்திய வேலைக் காரர்கள் ஒரே கட்டுப்படாய் வேலை செய்யாமல் நின்று விட்டார்கள். தங்களுக்கு இன்னின்ன குறைகள் இருக்கின்றன என்றும், அவைகளுக்குப் பரிகாரம் செய்யாவிட்டால்