பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 விடுகிறேன்' என்று கூறினர் பாரதியார். அய்யங்காரும் ஒருவாறு மனதைத் தேற்றிக்கொண்டார். - இந்தமாதிரி நெருக்கடியான நிலையில் என்ன செய்வது என்று எண்ணியவாறு திண்ணையில் வீற்றிருந் கார் பாரதியார். - எங்கிருந்தோ வந்தான் என்று பாரதியார் பாடி யிருக்கிருர் அல்லவா? அந்தப் பாட்டுடைத் தலைவனகிய குவளை கிருஷ்ணமாச்சாரியார் வ. ந் தார். அவர் சிட்டி குப்புசாமி அய்யங்காரின் உறவினர்; புதுவை கால்வே கல்லூரியில் கல்வி பயின்ற இளைஞர்; இந்தியா பத்திரிகையின் வாசகர்; ஆனால், திண்ணையில் உட்கார்ந் திருந்தவரே அந்த இந்தியா பத்திரிகையின் ஆசிரியர் என்பது அறியாதவர். இருவரும் பல்வேறு விஷயங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். "இந்தஊரிலே, இந்தியா பத்திரிகையை தருவித்துப் படிப்பவர் எவரையேனும் தெரியுமா?" என்று கேட்டார் பாரதியார், 'தெரியுமே!’ என்ருர் அந்த இளைஞர். 'அவரை நான் பார்க்க விரும்புகிறேன்" என்ருர் பாரதியார். "ஓ! போகலாம் வாருங்கள். நான் அழைத்துக் கொண்டு போகிறேன்' என்ருர் இளைஞர். இளைஞரைத் தொடர்ந்தார் பாரதியார். சுந்தரேச அய்யர் என்பவர் மணிலாக் கொட்டை வியாபாரி ஒருவரிடம் கணக்கு எழுதி வாழ்க்கை நடத் தியவர்; இந்தியா பத்திரிகையின் பால் பற்றுடையவர். பத்திரிகையின் சந்தாதாரர்.