பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுவைப் போராட்டம் பொழுது விடியுமுன்னரே ரயில்வண்டி புதுவை சேர்ந்தது. வண்டியை விட்டு இறங்கினர் பாரதி. சிட்டி குப்புசாமி அய்யங்காரின் வீடு நோக்கிச் சென்ருர். புதுவை பெருமாள் கோவில் தெருவிலே வசித்து வந்தாரி குப்புசாமி அய்யங்கார். அவரது வீட்டு விலாசம் பாரதியாரிடம் இருந்தது. எனவே அந்த வீ ட் டு க் கு ச் சென்ருர் பாரதியார். பூரீநிவாசாச்சாரியார் அளித்த கடிதத்தைக் கொடுத்தார். அதை வாங்கினர் குப்புசாமி அய்யங்கார். படித்தார்; பாரதியை வரவேற்ருர். காலை சிற்றுண்டி முடிந்தது. வீட்டுத் திண்ணையிலே படுத்தார் பாரதியார்; உறங்கினர். இவ்வாறு இரண்டே நாட்கள் சென்றன. பாரதியார் வந்து சேர்ந்த செ ய் தி அறிந்தது சென்னைப் போலீஸ். பிரெஞ்சுப் போலீஸ் மூலம் தொல்லை கொடுக்கத் தொடங்கியது. குப்பு சாமி அய்யங்காரை அச்சுறுத்தியது. பாவம்! அய்யங்கார் என்ன செய்வார்? சொல்லவும் முடியவில்லை, விழுங்கவும் முடியவில்லை. ஒருவாறு பாரதியார் இதனை அறிந்துகொண்டார். 'அஞ்சாதீர் அய்யங்காரே! இரண்டுநாள் பொறுத் திரும். நான் வேறு இடம் பார்த்துக்கொண்டு போய்