பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 குளிப்பர்: ஈரத்துணியை உலர்த்துவர்; வேறு துணி கட்டிக்கொண்டு சிற்றுண்டி தயார் செய்வர். சிற்றுண்டி முடிந்தபின், மூவர் "இந்தியா ஆபீசுக்குச் சென்று அங்கே வேலை செய்வர். மற்ற மூன்று பேர் வீட்டிலே சமையல் செய்வர். மண்சட்டியில்தான் சமையல் செ ய் வ து வழக்கம். எல்லாரும் ஒன்ருக அமர்ந்து உண்பர். பகல் சாப்பாடு முடிந்த உடனே, காலையில் உணவு தயாரித்த மூவரும் "இந்தியா ஆபீசில் வேலை செய்யப் போய்விடுவர். காலையில் "இந்தியா ஆபீசில் வேலை செய்த மூவரும் இரவு உணவு தயாரிப்பர். "இந்தியா பத்திரிகை வேகமாக வளர்ந்தது. பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து வெளியேறி, பிரெஞ்சு இந்திய எல்லைக்குப் போய் விட்டால் அங்கே எவ்விதமான தொல்லையும் இராது, எ வ் வி த இடையூறுமின்றி நாட்டுக்குத் தொண்டு செய்யலாம் என்று எண்ணினர் பாரதி. அந்த எண்ணமே அவரைப் புதுச்சேரி செல்லத் தூண்டியது. ஆனல் பிரிட்டிஷாரின் தொல்லை அங்கும் அவரைத் தேடிச் சென்றது. பிரிட்டிஷ் இந்தியப் போலீசார் பாரதிக்கு அளித்த தொல்லைகளுக்கு ஓர் எல்லை இல்லை. பிரெஞ்சு எல்லைக்குள் சென்று பாரதியைக் கைது செய்வது இயலாது. எனவே ஏதாவது ஒரு பொய்க் கேஸ் கற்பனை செய்ய வேண்டும். அவ்வாறு பொய்க்கேஸ் கற்பனை செய்யும் பொருட்டு உளவாளர் சிலரை ஏற்படுத்தினர் பிரிட்டிஷ் இந்திய போலீசார். இது பற்றிச் சுவையான கடிதம் ஒன்று இந்தியா பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. 1909ம் ஆண்டு