பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

752 உளவாளிகளின் தொல்லை இதோடு நிற்கவில்லை. மேலும் தொடர்ந்தது. 1910ம் ஆண்டு பிப்ரவரி 26ந் தேதி 'இந்தியாவில் ஒரு தலையங்கம் எழுதி வெளியிட்டார் பாரதியார். "எப்படி நம்புவது?" என்ற தலைப்புடன் அத் தலையங்கம் வெளிவந்தது. அது வருமாறு : 'நமது பத்திரிகையில் சென்ற வாரத்தில் வரைந்துள்ள "உடன் பிறந்தே கொல்லும் வியாதி" என்ற வியாசத்திற் கேற்ப நமதுாரிலுள்ள ஆங்கில ஸி. ஐ. டி. இலாகாவைச் சேர்ந்த வொருவர் நாமிந்த தர்மபூமிக்கு வந்ததும் நம்முடன் பழமையான சிநேகிதத்தோடு வந்து, நமது ஆபீஸில் வேலை பார்க்க தனக்குப் பிரியமிருப்பதாகத் தெரிவித்தார். ஆனல் அவர் நமக்கு இஷ்டனைப் போலிருப் பதால், அவரை வேலையில் வைத்து வேலை வாங்க சம்மதிக் காது சாதாரணமாக வரப் போகவிருக்கும் படியே செய் தோம். பிறகு அவர் நமது ஆபீசுக்கு வரப்போகவிருப் பதைத் தெரிந்த ஸி. ஐ. டி. இலாக்காதாரர். இவரால் தங்களிஷ்டம் போல் முடியுமென்று கருதி இவரை தங்களி லொருவராக நியமித்துக் கொண்டு எவ்விதத்திலும் பிரயாசைப் பட்டார்கள். எது பயன்பட்டதும் படாததும் தெரியாமலிருக்க, சென்ற 1909-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24-ம் தேதியில் வெளியான 41-வது லக்கமுள்ள "இந்தியா’ பத்திரிகையில் 9வது பக்கத்தில் "இன்பார்மர்" என்று கையொப்பமிட்ட விலாசமானது டிெ கையொப்ப மிட்டவராலேயே எழுதப்பட்டு எமக்குக் கொடுக்கப் பட்டிருக்கிறது. இஃதிப்படி இருக்க, சென்ற வார மத்தியில் டிெ யார் பழமையான சிநேகிதத்தை முன்னிட்டுக் கொண்டு நம்மிடம் வந்து சம்பாஷித்துக் கொண்டிருக்கும் போது, ஸி. ஐ. டி. மேலதிகாரிகள் டிெ வியாசமானது யார் எழுதினதென்று தன்னைக் கேட்டதாகவும், அதற்குத் தான் "இந்தியா ஆபீஸுக்குச் சென்றிருந்தபோது