பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞன் உருவாகிருன் இன்று எட்டயபுரம் பெருமை பெற்று விட்டது. காரணம் என்ன? மகாகவி பாரதியார் அந்த ஊரிலே பிறந்தார் என்பதே. பதினெட்டாம் நூற்ருன்டின் தொடக்கத்திலே எட்டயபுரம் ஒரு பாளையப்பட்டு. மதுரையைத் தலை நகராகக் கொண்டு ஆண்டு வந்த நாயக்க மன்னர்கள் தங்கள் ராஜ்யத்தைப் பல பாளையப்பட்டுகளாக வகுத் திருந்தார்கள். அத்தகைய பாளையப்பட்டுகளிலே ஒன்று தான் எட்டயபுரம். பின்னர் வாணிபத்தின் பொருட்டு இங்கு வந்த ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியார் நாடு பிடிக்கத் தொடங்கினர். ஆங்கிலக் கம்பெனியாரின் ஆதிக்கத்தை எதிர்த்தது பாஞ்சாலங்குறிச்சி. இதுவும் ஒரு பாளையப்பட்டுதான். பாஞ்சாலங்குறிச்சி கட்டப்பொம்மனின் வீரப் போர் நாடறிந்த ஒன்று. இந்தப் போரிலே எட்டயபுரம் கொண்ட பங்கு என்ன? எட்டயபுரம் எவர் பக்கம் நின்றது? பாஞ்சாலங் குறிச்சி பக்கம் நின்றதா? இல்லை; இல்லை. ஆங்கிலேயர் பக்கம் நின்றது: பாஞ்சாலங்குறிச்சிக்கு எதிராக 8