பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181 வந்தவர் திரும்பிப் போளுர்; தர்ம ராஜாவிடம் விஷயத்தைக் கூறினர். தர்மராஜா என்ன செய்தார்? வீட்டுக்குச் சென்ருர். புது வேஷ்டி ஒன்றை எடுத்தார். அந்த ஆளிடம் கொடுத் தார். பத்து ரூபாய் பணமும் கொடுத்தார். "அவருக்குச்.சாப்பாடு கொண்டுபோய்க் கொடு. இந்த வேஷ்டியைக் கொடு. இந்த ரூபாயையும் கொடு" என்ருர். தர்மராஜா கூறியபடியே கொண்டுபோய்க் கொடுத் தார் அவர், கண்டார் பாரதியாt; மகிழ்ந்தார். ராஜாவுக்கு நன்றி கூறினர்; ராஜாவைப் பாராட்டினர். புது வேஷ்டியை உடுத்துக் கொண்டார். பிறகு பசியrறினர். பணத்தையும் வாங்கிக் கொண்டார். அருகே சிறுவன் ஒருவன் நின்று கொண்டிருந்தான். அவனிடம் அரை அணுவைக் கொடுத்தார்: "இரண்டு கார்டுகள் வாங்கிவா என்ருர். சிறுவன் ஓடினன். இரண்டு கார்டுகள் வாங்கிவந்தான். அப்போது, தபால் கார்டு ஒன்றன் விலை காலணுதான். அந்த கார்டிலே ஒரு பாடலை எழுதினர் பாரதியார். ஒரு கார்டில் சேற்றுார் ஜமீந்தார் விலாசத்தை எழுதினர். இன்னுமொரு கார்டிலே எலிமலை ஜமீந்தார் விலாசத்தை எழுதினர். இரண்டு கார்டுகளையும் தபாலில் சேர்க்கும்படி அந்தச் சிறுவனிடம் கொடுத்தார். சிறுவன் என்ன செய்தான்? பாடலை ஒரு நோட்டில் எழுதிக் கொண்டான். கார்டுகளைத் தபாலில் சேர்த்தான். பாரதி பாடிய பாடல் இதுதான்,