பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 இதற்கிடையில் பாரதியின் மனைவி வந்தார்; பாரதியார் வருந்துவது கண்டார்; உள்ளே சென்ருர். ஒரு கிண்ணத்தை எடுத்துவந்து பாரதியிடம் கொடுதி தார். அந்தக் கிண்ணத்தைக் கண்ட உடனே துள்ளிக் குதித்தார் பாரதியார். அவரது அழுகை பறந்தது. மகிழ்ச்சி பொங்கியது. அந்தக் கிண்ணத்திலே சொஜ்ஜி இருந்தது. அதைதி தமது நண்பருக்குக் கொடுந்தார்; மகிழ்ந்தார், கள்ளம் கபடம் அற்ற உள்ளம் படைத்தவர் பாரதியார். குழந்தை போன்ற குணம். - கூறியவர் : உலகநாதநாயக்கர். பாரதியார் பசியால் வாடுவாரே என்று கருதிச் சிற்றுண்டி தயார் செய்து கொண்டுவந்து கொடுப்பார் அவரது மனைவி. அதை வாங்கிக் கொள்வார் பாரதியார். உடனே அதைத் தர்மே தின்றுவிடமாட்டார். காக்கைக்குக் கொஞ்சம் குருவிக்குக் கொஞ்சம்! எறும்புக்குக் கொஞ்சம்! இப்படியாகச் சிற்றுண்டியில் முக்கால் பாகத்தைப் போட்டுவிடுவார். மீதியுள்ள கால் பாகத்தையே தாம் தின்பார். "எதை வேண்டுமானலும் பொறுக்க முடியும். ஆனல் கொடுத்த உணவைத் தாம் உண்ணுமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னுல் சகிக்கவே முடிந்ததில்லை." பாரதியார் சரித்திரத்தின் முன்னுரையிலே இவ்வாறு சொல்கிருர் செல்லம்மாள் பாரதி. இது 1952 - ம் ஆண்டு திருச்சி வானெலியில் செல்லம்மாள் பாரதி நிகழ்த்திய உரையில் உள்ளது.