பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 ஏதோ தேறி, சர்க்கார் உத்தியோகத்துக்குப் போகாமல் வியாபாரஞ் செய்து சிறிது பணம்தேடி வைத்து விட்டார். இவருக்கு இரண்டாந்தாரம் விவாகமாகி விட்டது. எனவே தனது தாயைப் பெற்ற பாட்டனரும் பாட்டியும் சங்கரனைப் பிராணளுகவே நினைத்துவிட்டார்கள். சங்கரன் விளையாடுவதற்கு வேண்டுமென்று கேட்டால், தாத்தா தாம் பூஜை செய்யும் சிவலிங்கத்தைக்கூடக் கொடுத்து விடுவார். அத்தனை செல்லம்'. ஆனல் சிவலிங்கத்தைப் பற்றி யாதொரு விதமான பயத்துக்கும் இடமில்லை. பையன்தான் விளையாட்டில் புத்தி செலுத்தும் பழக்கம் இல்லையே! பையனுடைய கையும் காலும் வாழைத் தண்டைப் போலிருக்கும். பிரானசக்தி வெகு சொற்பம். நெஞ்சு அரையேமாகாணி அடி அகலம். கண்கள் ருதுவாகி நோய் பிடித்திருக்கும் கன்னிகளின் கண்களைப் போலி ருக்கும். முதுகிலே கூன். ஆணுயினும், பெண்ணுயினும் ஏதேனும் ஒரு புதிய முகத்தைப் பார்த்தால் கூச்சப் படுவான். தற்காலத்தில் நமது தேசத்துப் பள்ளிக்கூடங் களிலேயே பிள்ளைகளைப் பெண்களாக்கிவிடும் திறமை உபாத்திமார்களுக்கு அ தி க மு ன் டு. அ. த் து ட ன் கவிதையுஞ் சேர்ந்து விட்டது-கவுண்டனுார்க் கவிதைபையனுக்கு ஜீவதாது மிகவும் குறைந்து பொய்மை நிறைந்த சித்த சலனங்கள் மிகுதிப்பட்டு விட்டன. இந்த வினேதமான பிள்ளையைத் தாத்தாவும் பாட்டியும் ஏதுமறியாத வெறும் பொம்மை போலப் பாராட்டினர்கள், பால் குணம் மாருத குழந்தை' என்பது அவர்களுடைய கருத்து. அவனுக்கென்று தனியாக ஒரு சுபாவமும், தனி சம்ஸ்காரங்களும் ஏற்பட்டதாகவே அவர்களுக்கு நினைப்பில்லை. அவனுடைய புலமை ஈசனல் கொடுக்கப்பட்ட வரமென்றெண்ணிஞர்கள். ஏதுமறியாத குழந்தைக்கு இப்படிக் கல்வி ஏற்பட்ட ஆச்சரியத்தால்