பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பிரைமரி போர்டு பரீட்சையில் தேர்ச்சி பெறுவதும், நற்சான்று பெறுவதும் சிறந்த கெளரவம் என்று அந்தக் காலத்துச் சிறுவர்கள் கருதினர்கள். இந்த வழக்கப்படி ஏ. வி. ஸ்கூல் மாணவர் பலர் அந்தப் பரீட்சையின் பொருட்டு நாசரெத் சென்றனர். சுப்பையாவும் சென்ருன். பாதிரியார் முன் நின்ருன். "உனக்குத் தெரிந்த ஆங்கிலப் பாடல் ஒன்றைச் சொல்லு" என்று கேட்டார் பாதிரியார். "ட்விங்கில் ட்விங்கில் லிட்டில் ஸ்டார்” என்ற பாடலை மிகுந்த உணர்ச்சியுடன் பாடினன் சுப்பையா, பாடலிலே ன்னை மறந்து ஈடுபட்டான்; வானிலே உள்ள நட்சத்திரங் களுடன் பேகபவன் போலவே காணப்பட்டான். கேட்டார் பாதிரியார்; மகிழ்ந்தார்: சுப்பையாவைப் பெரிதும் பாராட்டினர். சூழ்நிலைதான் மனிதனை உருவாக்குகிறது. எட்டய புரத்தின் சூழ்நிலை எப்படியிருந்தது? கவிதை பொங்கி வழிந்தது. தமிழ்ப் புலவர் பலர் இருந்தனர். குற்ருலக் குறவஞ்சியையும், கூளப்ப நாயக்கன் காதல் பாடல்களையும் பாடி மகிழாத புலவர் எவருமே இலர் எட்டயபுரத்திலே. ஆணும் சரி, பெண்ணும் சரி, அண்ணுமலே ரெட்டி யாரின் காவடிச் சிந்தைப் பாடிய வண்ணம் இருப்பர். கும்மியும் கோலாட்டமுமே பெண்களின் பொழுதுபோக்கு. இத்தகைய சூழ்நிலையில் வளர்ந்த சிறுவன் கப்பையா எப்படியிருந்தான்? கவிதையிலே ஊறினன்: கவி சொப் பளித்தான்.

  • காவடிச் சிந்திலே புகழ் பெற்றது. சென்னிகுளம் ஆண்ணுமலே ரெட்டியாரின் காவடிச் சிந்துதான்.
  • புதுமைக்கவி பாரதியார்-தி. ஜ. ர,