பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

245 விளங்கவில்லை. சிற்சில காரணங்கள் தோன்றுகின்றன: ஆனல் ஒருவேளை சரியாக இருக்குமோ இராதோ என்ற அச்சத்தால் இங்கு வெளியிட மனம் வரவில்லை. புத்தி என்ருன் முத்திருளன். "என்ன முத்திருளு, உன் முகத்தைப் பார்த்தால் ஏதோ நல்ல சமாச்சாரம் கொண்டு வந்திருக்கிறது போல் தோன்றுகிறது. என்ன, நான் நினைத்தது சரியா, தப்பிதமா?' என்று ஜமீந்தார் கேட்டார். "ஐயோ! அவ்விடத்து ஊகத்திலே ஒரு வார்த்தை சொல்ரது அதுதப்பியும் போகிறதா? இது எங்கேயாவது நடக்கிற சங்கதியா? மனுஷ்யாளுடைய நெஞ்சுக்குள் ளிருக்கிற ரகஸ்யத்துக்குள் இருக்கிற ரகஸ்யமெல்லாம் மகாராஜாவுடைய புத்திக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போலவும், கண்ணிலே விழுந்திருக்கும் பூவைப் போலவும் நன்ருகத் தெரிந்து போகுமே! ஆடியேன் மனசில் இருக் கிறது தெரியாதா?’ என்ருன் முத்திருளன். கொஞ்சம் தெளிவு குறைந்ததும், தர்க்க சாஸ்திர விதிகளுக்கு இசையாததுமான இந்த ஸ்துதியைக் கேட்டு கவுண்டரவர்கள் மிகவும் சந்தோஷமடைந்து, முப்பத்தி ரண்டு பற்களில் விழுந்தது போக மற்றுள்ள காவி பூத்த பற்களெல்லாம் பெரி ய வும் சிறியவுமாகிய மாதுளங்கனி விதைகளைப் போலவும், வேறு பல உவமைப் பொருள்களைப் போலவும், வெளியே தோன்றும் படி பலமான மந்தஹாசம் புரிந்தார். முத்திருளன் மீது பொதுவாக எப்போதுமே ஜமீந்தாரவர்களுக்கு அன்பதிகம். அவன் நெடுநாளைய வேலைக்காரன். பல தந்திரங்கள் தெரிந்தவன். தவிரவும் பாலியத்தில் ஜமீந்தாரவர்கள் சில்லரை விளையாட்டுகள் விளையாடிய போது உடந்தையாக இருந்து பலவித உதவிகள் செய்