பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 உபய வேதாந்த பிரவர்த்தன திவர்த்தன சம்வர்த்தன சாரிய பெருங்குன்றம் கிடாம்பியாச்சான் ஆம்ரோதன சார்யர், முத்தமிழ்ச் சிங்கக்குட்டி முத்துக் கருப்பண பாவலர், தோடி நாராயணய்யங்கார், முடுகு பல்லவி வேதாசல குருக்கள், கம்பராமாயணப் பிரசங்கம் ஆறுமுகக் கவுண்டர், மூங்கிலறுப்பு ராமச்சந்திர பாகவதர், அறுபத்து நாலக்ஷர பிச்சாண்டி பாகவதர், பரமபத தூஷண ஸ்வமத பூஷண, சர்வ மத பாஷாண பூர்ண பரமசிவனவர்கள். தொல்காப்பியம் இருளப்ப பிள்ளை, காமரஸ் மஞ்சரி சுந்த ரய்யர் இவர்களே முக்கிய வித்துவான்கள்-இனி சில்லரை வித்துவான்கள் பலருண்டு. மேலே சொல்லப்பட்ட வித்துவான்கள் எல்லோரும் புடை சூழ்ந்திருக்க, வானத்துப் புலவர்களுக்கு நடுவே இந்திரன் போலவும், (வானத்து) மீன்களுக்கு நடுவே ஆமை (சந்திரன்) போலவும், இன்னும் எதையெல்லாமோ போலவும் கவுண்டர் வீற்றிருந்தார். அப்போது அடப்பை தூக்கும் தொழில் உடைய வனும், ஆளுல் முத்தமிழ் புலவர்களுக்குள்ளே மிகச் சிறந்த வகுப்பில் வைத்து எண்ணத் தக்கவனுமாகிய முத்திருளக் கவுண்டன் வந்து, பின்வருமாறு விண்ணப்பஞ் செய்துக் கொள்ளலானன். "புத்தி' என்ருன் முத்திருளன். (ஜமீந்தாரவர்களிடம் வேலையாட்கள் பேசும்போதே புத்தி என்று தொடங்குவது வழக்கம்.) இந்தச் சொல்லை இந்த இடத்தில், இந்த சரித்திரத்தில் வழங்குவதற்கு உள்ள விசேஷ காரணத்தைக் கண்டுபிடித்துச் சொல்லும்படி தமிழ் நாட்டில் மலிந்து கிடக்கும் பாஷா பரிசோதனைப் பண்டிதர்களிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுகிறேன். நான் யோசனை செய்து பார்த்தால் எனக்கு ஒன்றுமே