பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

243 வார். அப்பால், வெற்றிலை, புகையிலை, ஊர் வம்பு, கதை முதலியன. இரவு சுமார் பத்து மணியாகும்போது ஜமீந்தாருக்கு ஒருவாறு புகையிலைச் சாறும், லேகிய வெறியுமாகச் சேர்ந்து தலையை மயக்கி, சாய்ந்தபடி, கதை கேட்கக்கூட முடியாதவாறு செய்து விடும். வம்பு பேசும் காரியஸ்தர் களுக்கும் நின்று நின்று காலோய்ந்து போய்விடும். எனவே கவுண்டர் எழுந்து கை கால் சுத்தி செய்வித்துக்கொண்டு, ஸந்தியாவந்தனம் செய்து முடித்து, லேகியம் தின்றுவிட்டு, அந்தப்புரத்திலே போய் சாயந்திரப்படி முப்பத்திரண்டு கவளம் சாப்பிட்டு உடனே நித்திரைக்குப் போய்விடுவார். ஜமீந்தாரவர்களுக்கு ஐந்து மனைவிகளுண்டு. ஆனல் ஜமீந்தாரவர்களோ அர்ஜூனனுக்கு நிகரானவர். விராட நகரத்திலிருந்த அர்ஜுனனுக்கு-அதாவது, மகாராஜ ராஜ பூஜித மகாராஜ ராஜபூரீ மகாராஜ மார்த்தாண்ட சண்ட பிரசண்ட அண்ட பகிரண்ட கவுண்டாதி கவுண்ட நகராதிப ராமசாமிக் கவுண்டரவர்கள் பரிபூரண நபும்ஸ்க னென்று தாத்பரியம்-இவருடைய தினசரிக் காரியம் ஒருவாறு சொல்லி முடித்தோம். இன்னும் எவ்வளவோ சொல்ல வேண்டியிருக்கிறது. சந்தர்ப்பம் வாய்க்குமிடத்து அப்போதப்போது சொல்லுகிருேம். இவ் வத்தியாயத்தின் மகுடத்திலே குறிப்பிட்டபடி இவருடைய சபையைப்பற்றி மாத்திரம் கொஞ்சம் விவரித்துச் சொல்லப் போகிருேம். நம்முடைய கதாநாயகனுகிய சங்கரன் இந்தச் சபையைச் சேர வேண்டியவனுக இருக்கிறபடியால். ராமசாமி கவுண்டர் தமிழிலும், சங்கீதத்திலும் வித்வானென்று முன்னமேயே சொல்லியிருக்கிருேம். அவருடைய சபை யிலுள்ள பண்டிதர்களுடைய பெயர், இயல் சிறப்பு முதலியவற்றைச் சிறிது விஸ்தரிக்கின்ருேம். வித்துவான் அண்ணுத்துரை ஐயர், தர்காலங்கார சர்வ சாஸ்திரசாகர