பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 நிற்க வேண்டும். கிளர்ச்சி செய்து நமக்கு வேண்டிய வற்றை அடைய வேண்டும் என்பது இன்னொரு கருத்து. இக் கருத்துக் கொண்டவர் பாலகங்காதர திலகர், விபின சந்திர பாலர் முதலியோர். இந்த இரண்டு விதமான கருத்துக் கொண்டவர்களும் வெளிப்படையாக மோதிக் கொள்ளவில்லை. ஆனல் இவ்விரு கோஷ்டியினரும் தங்கள் கருத்துக்கு ஆக்கமும் ஆதரவும் தேடிக்கொண்டே வந்தனர். இந்தக் கால க ட் ட த் தி ல் தா ன் பாரதியா அரசியலில் பிரவேசித்தார். பாரதியாரின் கருத்து முழுவதும் திலகர் பக்கமே நின்றது, ஆனல் ஜி. சுப்பிர மணிய அய்யரோ அதற்கு இடம் கொடுக்கவில்லை. "ஆசையும் நேசமும் ஆனந்தமும் அங்கே: பாசலும் பேசலும் பிதற்றலும் இங்கே, என்ற கோபால கிருஷ்ண பாரதியின் பாட்டுக்கு ஒர் எடுத்துக் காட்டாக விளங்கினர் ஜி. சுப்பிரமணிய அய்யர். திலகர் கோஷ்டியிடத்திலே அவருக்குப் பற்றுதல் இருந்தது; மதிப்பும், மரியாதையும் இருந்தன. ஆயினும் கோகலே கோஷ்டியை எதிர்த்து நிற்க அவர் விரும்ப வில்லை. ஆகவே, ஜி சுப்பிரமணிய அய்யர் பாரதியிடம் அன்பு காட்டினர்; ஆதரவு அளித்தார்; ஆல்ை தீவிரமாக 'சுதேசமித்திர'னில் எழுத அவர் இடமளித்தாரிலர். கதேசமித்திரனில் சேர்ந்தபோது பாரதியாரின் அரசியல் அறிவு அவ்வளவு தெளிவு பெறவில்லை எனலாம். சுதேசமித்திரனில் சேர்ந்த பின்னர் நாளடைவில் அவரது அரசியல் அறிவு கூர்மை பெற்றது; தீவிரமடைந்தது.