பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#3 பாரதியாரின் அரசியல் அறிவை நன்கு பட்டை போட்டுத் தீட்டிவிட்டது சுதேசமித்திரன். தீவிரக் கட்சியில் நின்ற பாரதியார் தமது கருத்துக் களே எந்த விதமான தடையுமின்றி வெளியிடத் தக்கதோர் பத்திரிகையை விரும்பினர். அவரைம் போலவே வேறு சிலரும் விரும்பினர். அவருள் ஒருவர் என். திருமலாச்சாரியார் என்பவர். அவர் ஒரு புதிய பத்திரிகையை வெளியிடுவதற்கு வேண்டியன செய்தார். புதிய பத்திரிகைக்கு இந்தியா" என்று பெயரிட்டனர். 1906ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வாரந்தோறும் வெளிவரத் தொடங்கியது இந்தியா.”

  • இந்தியா பத்திரிகையின் காரியாலயம் பிராட்வே யில் இருந்தது: பிராட்வேயில் 34 என்ற இலக்கமிட்ட இடத்திலிருந்து வெளிவந்தது; அதே இடத்தில் அதன் அச்சகமும் இருந்தது. அதன் பெயர் இந்தியா அச்சகம்’ என்பது.

பத்திரிகையின் அளவு அரை கிரவுன் சைஸ். அதாவது 15 அங்குல நீளம்: 10 அங்குல அகலம். பக்கங்கள் எட்டு. சென்னையில் ஒரு பிரதியின் விலை முக்கால் அணு; வெளியூர்களில் ஒரணு, பத்திரிகையின் பதிவு என் எம். 578, இப்பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை மேற் கொண்டார் பாரதியார். பத்திரிகையின் காரியாலய நிர்வாகியாக இருந்தவர் எம். பி. திருமலாச்சாரி என்ற இளைஞர். பத்திரிகையின் சொந்தக்காரராகவும், வெளி

  • சித்திர பாரதி.