பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 களே ஏற்றிக்கொண்டு போய் அந்த நாட்டிலே இறக்கி வந்தன. இதுதான் 1905-ம் ஆண்டில் இருந்த நிலைமை. நாட்டிலே வளர்ந்து வந்த சுதேசிப்பற்று என் செய்தது? வெள்ளைக்காரர் கப்பல் கம்பெனிக்குப் போட்டி யாக ஒரு சுதேசிக் கப்பல் கம்பெனியை உருவாக்கியது. அந்த சுதேசி கப்பல் கம்பெனியின் பெயர் சி. வ. கம்பெனி என்பது. வெள்ளைக்கார கப்பல் கம்பெனியின் பெயர் பி. ஐ. எஸ். என். என்பது. இந்த இரண்டு கம்பெனி களுக்கும் வியாபாரப் போட்டி ஏற்பட்டது. சுதேசிகளால் நடத்தப்பட்டு வந்த சி. வ. கப்பல் கம்பெனியைக் கண்டு வயிறு எரிந்தது வெள்ளைக் கம்பெனி. தங்கள் ஏகபோகக் கொள்ளைக்குப் போட்டி வந்தது கண்டு ஆத்திரம் கொண்டது; சி. வ. கம்பெனியை எப்படியாவது ஒழித்துவிட முயன்றது. அம் முயற்சிக்கு உறுதுணையாக ஒரு வெள்ளை அதிகாரியும் தூத்துக்குடி, யிலிருந்தான். அவன் பெயர் வாலர் என்பது. இவன் தூத்துக்குடியில் அளிஸ்டென்டு கலெக்டராக இருந்தான். வெள்ளைக் கம்பெனிக்கு சாதகமாகவும், சுதேசிக் கம்பெனிக்குப் பாதகமாகவும் இவன் செய்த அக்கிரமங்கள் ஒன்ரு? இரண்டா? பல; பலப்பல. வாலரின் திருவிளையாடல் களைக் க ண் டி த் து பாரதியார் எழுதினர். ாதுத்துக்குடியிலே புல்லரின் முறைகள்' என்ற தலைப் பிட்டு முன்னொரு முறை தூத்துக்குடியில் வாலர் என்ற ஆங்கிலேய அஸிஸ்டெண்ட் மாஜிஸ்டிரேட்டின் நியாய விரோதமான செய்கைகளைப்பற்றிப் பேசிக் கொண்டிருந் தோம். இப்பொழுது மறுபடியும் அவருடைய தப்புச் செயல்களின் ஜாப்தா ஒன்று தூத்துக்குடி நிருபர் ஒருவர்