பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ሃö தங்கியிருந்த ஒரு நாளில் மட்டும் அந்த இடத்திற்கு சுமார் ஆயிரம் விருந்தாளிகள் வந்திருக்கக் கூடும். அப்படி இருந்தும் அவர்களுக்கெல்லாம் தக்கபடி உபசரணைகள் செய்யப்பட்டன. நாங்கள் வந்ததற்கு இரண்டு நாட் களுக்கு முன்பாகத்தான் மேற்படி கிருகத்திலே திலகர். லாஜ்பதிராய், அஜித்சிங் என்ற மூவர்களும் வ ந்திருந்து விட்டுப் போனதாகக் கேள்வியுற்ருேம். அன்றைய தினம் பகல் முழுவதும் பம்பாய் நகரத்திலே உள்ள முக்கியமான ஸ்தல்ங்களைச் சுற்றிப் பார்த்தோம். இரவு சுமார் 10.30. மணிக்கு ரயிலேறிக் காலையிலேஸ்லிரத் துக்கு வந்து சேர்ந்தோம். ரயில்வே ஸ்டேஷனில் காங்கிரஸ் கமிட்டியின் காரியதரிசியும், வேறு சிலரும் வந்திருந்தார்கள். நாங்கள் வந்தவுடனே எங்கள் முன்பு வந்து, "நீங்கள் காங்கிரஸ் கூடாரத்துக்குப் போகிறீர்களா? அல்லது புதிய கட்சியாரின் கூடாரத்துக்குப் போகிறீர் களா?" என்று விசாரணை செய்தார். நாங்கள், 'ஐயா, காங்கிரஸ் சபைக்குத் தான் வந்திருக்கிருேம். நாங்கள் சுதேசிக் கட்சியைச் சேர்ந்தவர்கள்” என்று மறுமொழி கூறிளுேம். நாங்கள் இது சொன்னவுடனே, காங்கிரஸ் காரியதரிசி எங்களைக் கவனியாமல் போய் விட்டார். இரண்டு கட்சியாருக்கும் முடிவான பிரிவினை உண்டாக்க வேண்டுமென்று மேட்டா வகுப்பினர் நிச்சயம் செய்து விட்டார்கள் என்பது எங்களுக்கு அப்போதே புலப்பட்டது. அப்பால் கதேசிக் கட்சியாருக்கென்று பிரத்தியேகமாக ஸ்டுரத் நகரத்துக்குள்ளே 'வாணியசேரி' என்ற இடத் தருகே வசதிகள் செய்து வைத்திருந்த சங்கத்தார்களிலே சிலர் எங்களை அழைக்கும் பொருட்டு வந்திருந்தார்கள். அவர்கள் தயார் செய்த வசதிக்குப் போய்ச் சேர்ந்தோம். அங்கே 'வந்தே மாதரம்' பத்திராதிபராகிய ரீமான் அரவிந்த கோஷ், துணைப்பத்திராதிபராகிய சியாமஸாந்தர