பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 கூடப் போவதன் சம்பந்தமாகப் புதிய கட்சியார் செய்ய வேண்டிய காரியங்கள் இன்னின்ன என்பதைத் திலகர் விஸ்தரித்துக் கூறினர். இந்த இரண்டு தினங்களிலேயும் புதிய கட்சிச் சங்கத்தார் செய்துகொண்ட தீர்மானங்கள் ராஜாங்க சம்பந்தமானவையாதலால் அவற்றை இந்தப் பொதுவர்த்தமானங்களோடு சேர்க்காமல் வேறிடத்திலே விவரித்தல் பொருந்துமென்று நினைக்கிருேம், புதுக்கட்சி கான்பரன்சுக்கு ஸர்தார் அஜித்சிங் வந்திருந்தார். அவரைச் சென்னை சுதேசியஸ்தர்களாகிய நாங்களெல்லோரும் காங்கிரஸ் பந்தலிலிருந்த எங்கள் கூடாரத்துக்கு அழைத்துச் சென்று ரோஜாப் புஷ்பங் களால் அர்ச்சனை செய்து வாழ்த்துக்கள் கூறி உபசரித் தோம். அஜித்சிங் 26 வயதுள்ளவர், சாமானிய குடும்பத் திலே பிறந்தவரான போதிலும், பார்வைக்கு ராஜ குமாரனைப் போலிருக்கிரு.ர். வீரியமும், பராக்கிரமமும், ஸாஹஸமும், கூர்மையான அறிவும், களங்கமற்ற சிந்தையும், இவர் முகத்திலே ஜொலித்துக் கொண்டிருக்கின்றன. இவர் தம்முடைய அற்புத சரித்திரத்தை யெல்லாம் நாம் வற்புறுத்தியதன் பேரில் நமக்குத் தெரிவித்திருக்கின்ருர். அதைச் சுருக்க மாக விவரித்துவிட்டு மேலே செல்லுவோம். லாலா லாஜ்பதிராயைப் பிடித்து மாண்டலேக்கு அனுப்பியவுடனே ஸர்க்கார் அதிகாரிகள் இன்னுெரு தேசாபிமானியைப் பிடித்து அனுப்பப் போகிருர்களென்ற பிரஸ்தாபம் உண்டாயிற்று. தேச முழுவதும் இந்த இரண்டாவது தேசாபிமானி யாராயிருக்கலாம் என்று ஆவலுடன் பார் த் து க் கொண்டிருந்தது. லாலா லாஜ்பத்ராயின் உயிர்த் தோழராகிய லாலா ஹம்ஸராஜ் என்பவரை ஒருவேளை அனுப்பக் கூடும் என்ற சந்தேகம்