பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 உண்டாயிற்று. அப்பால் ஸர்தார் அஜித்சிங் என்ற ஒருவரைப் பிடித்து அனுப்பப் போகிருர்கள் என்ற சமாசாரம் கிடைத்தது. சில நாட்களிலே ஸர்தார் அஜித்ஸிங் போலீசார் வசமிருந்து தப்பி விட்டாரென்றும், இவர் இன்ன இடத்தில் ஒளிந்துக் கொண்டிருக்கிருர் என்பதும் தெரியாமல் தேடித்திரிந்து கொண்டிருக் கிருர்கள் என்றும் வர்த்தமானம் தெரிந்தது. லாலா லாஜ்பத்ராய் மேலேனும், ஸர்தார் அஜித்சிங் மேலேனும் அதிகாரிகள் எவ்விதமான குற்றமும் எடுத்துக்கூற முடிய வில்லையாயினும் ஸர்தார் அஜித்சிங் ராணுவத்தாரின் மனதிலே ராஜ துரோகம் விளைவிக்க முயற்சிகள் புரிந்தார் என்று வதந்தி உண்டாயிற்று. பிறகு ஒருநாள் அமிருத சரஸ் என்ற நகரத்திலே ஸர்தார்.அஜித்ஸிங் ஒருமடத்திலே மாறு வேஷம் கொண்டிருந்தாரென்றும் அங்கிருந்து அவரைப் பிடித்து மாண்டலேக்கு அனுப்பிவிட்டார் களென்றும் தந்தி கிடைத்தது. நாடகத் தோற்றங்கள் போலக் கேட்டோரெல்லாம் வியப்பும், மயிர்க் கூச்சும் அமையும்படியான இந்த சம்பவங்கள் நிகழ்ச்சி பெறுவதன் முன்பு நாமெல்லாம் அஜித்ஸிங் என்று பஞ்சாபிலே ஒருவர் உண்டென்பதைக்கூட அ றி ேய ம். வானத்திலே திடீரென்று ஒரு புதிய நட்சத்திரம் காணப்பட்டு எந்நாளும் மங்காத ஒளியுடன் பிரகாசிப்பதுபோல இவர் திடீரென்று நமது தேசபக்தர் திருக் கூட்டத்திலே வந்து சேர்ந்து கொண்டார்... சென்ற டிசம்பர் மாதம் காங்கிரஸ் சபை எந்த விதத்தில் தகர்ந்து போனது என்பதைப் பற்றி இங்கு சில விஷயங்கள் குறிப்பிடுவது பொருத்தமுடையதாகுமென்று கருதுகிருேம். 1906ம் வருஷத்திலே கல்கத்தாவில் காங்கிரஸ் நடந்தது. அதற்குச் சில மாதங்களின் முன்பு தான் கல்கத்தாவில் விபினசந்திர பாபு 'வந்தே மாதரம்"