பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருந்தாலும் பாகவதருடைய முகத்தில் காட்டும் அபிநயங்களைப் புகழ்ந்து சொல்லுதல் நம்முடைய கடமை. ஊடலை மாத்திரம் முகத்தில் தொண்ணுாற்றொன்பது அபிநயங்களில் காட்டுகிறார். இப்படி மற்ற வகுப்புகளையும் சேர்த்தால் எத்தனைவித அபிநயங்களாகும் நிறைய ஆகும் அல்லவா? கருணைரசத்தின் பாவம் சோகம் என்று சொல்லப்படும் இதைக் காட்டுவதில் மேற்படி பாகவதருக்குத் தோடா பண்ணிப் போடத்தகும். இன்னும் ஒன்று கடைசி. அதிலே தான் அந்தப் பாகவதர் முதல் தரமான வேலை செய்கிறார். அதாவதுபயாரக ரஸத்தைப் பதினாயிரம் அபிநயங்களில் காட்டுகிறார். இந்த ரஸ்த்திற்கு பாவம் பயம். மானுக்கும் முயலுக்கும் சில மனுஷ்யருக்கும் இயற்கையாகவுள்ள பயத்தை இவர் அபிநயத்தில் பூதக் கண்ணாடி போலக் காட்டுகிறார். இந்த பாவதர் சில தினங்களுக்கு முன்பு

என்னைப் பார்க்க வந்தார்.

‘ஹாஸ்யரஸம், ரெளத்ரஸம், வீர ரஸம், அற்புதம், சாந்தம் என்ற ஐந்து ரலங்களையும் நீங்கள் தீண்டவேயில்லை. அதென்ன காரணம் என்று கேட்டேன். அந்தப் பாகவதர் செகல்லுகிறார், “நான் என்ன செய்வேன், நான் நாட்டில் சாஸ்திரம் படித்தது கிடையாது. ஊரிலே கண்ட அபிநயங்களை நான் நடித்துக்காட்டுகிறேன். ஹிந்துக்களிலே அடிமைத்தனம் அதிகம். ஆதலால் எனக்கு ‘நைசிய பாவம்’ என்ற அடிமைத் தோற்றம் காட்டுதல் மிகவும் சுலபமாக வருகிறது. வீரரலம் காட்டச் சொன்னால் எப்படிக் காட்டுவேன், நான் பிறந்தது முதலாக இன்று வரை சஞ்சாரம் செய்து வந்திருக்கிற ஏழெட்டு ஜில்லாக்களில் ஒரு வீரனைக் கூட பார்த்ததில்லை. வீர ரஸத்திற்கு நான் எங்கே போவேன்’ என்று சொன்னார். அப்போது நான் “ரஸ் பண்டாரம் என்று சம்ஸ்க்ருத சாஸ்திரத்திலிருந்து பின்வரும் பொருளுடயை சுலோகங்களை அவருக்குப் படித்துக் காட்டினேன். அந்த நூல் சொல்லுகிறது.

‘லோக நடையினாலே சாஸ்திரம் பிறக்கிறது. அந்த சாஸ்திரத்தைப் பயிற்சியினாலே விஸ்தாரப்படுத்துகிறார்கள்.

ரஸ் திருஷ்டி ஏற்படுவதற்கு இயற்கையே மூலம், ரஸ்வான்களுடைய பழக்கத்தாலும் பக்தி வழிகளை அனுசரிப்பதனாலும் ஒருவன் ரஸ்க்காட்சியை வருவித்துக் கொள்ளலாம்.

‘ராகத்துவேஷங்களை ஐயிப்பதனால் ஒருவன் சித்த சமாதியடைகிறான். அப்போது ஞான திருஷ்டியுண்டாகிறது. அந்த ஞான திருஷ்டியுடையவர்கள் புறப் பயிற்சியில்லாமலே சாஸ்திரங்களுக்குக் கண்ணாடி போல் விளங்குவார்கள்.

‘சிங்கார ரஸத்தை ஒரு கூத்தன் காண்பிக்கும் அபிநயங்களில் கூத்துப் பெண்ணுடைய அபிநயங்கள் கலக்கலாகாது. ஆண் மகனே .ெ 1ண்ணுருக் கொண்டு கூத்தாடுவானாயின் அப்போது பெண்ணை அபிநயங்கள் காண்பிக்கத்தகும். ஆண் மகன் உருமாறால் கூத்தாடும் போது பெண்மை

99