பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோன்றலாகாது.

வீரரஸத்தில் ஒருவன் தேர்ச்சியடை விரும்புவானாயின்; ராமன் முதலிய அவதார புருஷர்களுடைய வடிவை அவன் தியானம் செய்யக்கடவான். நாராயண உபாசனையே கூத்தனுக்கு வீராசத்தில் தேர்ச்சி கொடுக்கும்.

பயாநகரளபத்தை சபையிலே கூத்தன் அதிகமாக விவரிக்கலாகாது. எந்த நாட்டில் கூத்தர் பயநகத்தையும் சோகத்தையும் அதிகமாகக் காட்டுகிறார்களே அந்த நாட்டில் பயமும் துயரும் அதிகப்படும்.

நைசியபாவம் அதிகமாகத் தோன்றும் கூத்தினாலே ஒரு நாட்டார்.அடிமை இயற்கை மிகுதியாக உடையவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். ஆதலால் கூத்தர் கூத்துக்களில் அடிமைத் தோற்றத்தை மிக மிங்சிக் காட்டாதபடி நாட்டார் கவனித்துக் கொள்ளவேண்டும்.

நாட்டில் சாஸ்திரத்தை உண்மையாகப் பயின்றால் அதிலிருந்து ஆண்களுக்கு ஆண்மையும் பெண்களுக்குப் பெண்மையும் உண்டாகும். அதை நெறிதவறிப் பயிற்சி செய்தால் அதிலிருந்து ஆணுக்குப் பெண்மையும் பெண்ணுக்கு ஆண்மையும் விகாரமாகத் தோன்றும்.

நாட்டிய சாஸ்திரத்தை ஆதியில் பரமசிவன் நந்திக்குக் கற்றுக் கொடுத்தார். அப்போது பகவான் நந்தியை நோக்கி ‘கேளாய் நந்தி அபிநயம் தவறுவதாலே ஜனங்கள் நரகத்தை அடைகிறார்கள். தர்மிஷ்டனாகிய கூத்தன் அபிநய உண்மைகளை ஆச்சார்யனிடமிருந்து நியமங்களுடனே கற்றுக் கொள்ள வேண்டும். அடிமைகள் கூத்துப் பழகினால் அபிநய தர்மங்களைச் .சிறிதேனும் தெரிந்து கொள்ளாமல் எப்போதும் அடிமைக் கூத்தொன்றே ஆடிக் கொண்டிருப்பார்கள். அங்ஙனம் அடிமைகள் சாஸ்திரி விரோதமாக நைச்யம் ஒன்றையே காட்டி நடத்தும் கூத்தைப் பார்ப்போர் நரகத்தை அடைகிறார்கள் என்று சொல்லி மேலும் சொல்லுகிறார்.

தர்மிஷ்டனாகிய சிஷ்யன் நெறிப்படி ஆசார்யனிடமிருந்து கற்றுக் கொண்ட நாட்டியத்தில் நவரஸங்களும் சமரசப்பட்டுக் காண்போருக்கு ஆனந்தத்தையும் லட்சுமி கடாக்ஷத்தையும் ஏற்படுத்தும். நல்ல ஆசார்யன் இல்லாமல் இந்த நாட்டிய சாஸ்திரத்தைப் பழகுவோன் உண்மையான பக்தியுடையவனாக இருக்க வேண்டும். தெய்வ பக்தியினாலே சகல வித்தைகளும் வசப்படும்.

இங்ஙனம் மேற்படி ரஸ் பண்டாரமென்ற நூலிலிருந்து நான் பல சுலோகங்களை அவருக்குப் படித்துக் காட்டினேன். இதையெல்லாம் கேட்டவுடன் அந்த பாகவதர் மிகவும் சந்தோஷமடைந்தவராய் ‘இந்த சாஸ்திரத்தை என்னிடம் கொடுங்கள் நான் எழுதிக் கொண்டு இந்தப் பிரதியைக் கொடுத்து விடுகிறேன்’ என்றார். அப்படியே செய்யுங்கள்’ என்ற சொல்ல அந்த சுவடியை அவரிடம் கொடுத்தேன்.

100