பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதில் நிலவளம், நீர்வளம், மலை வளம், கடல் வளம், மனித வளம் ஆகியவை குறிக்கப்படுகிறது. பாரத தேசத்தில் இத்தனை வளங்களும் ஏராளமாக உள்ளன. இதையே முதல் நிலை உற்பத்தி வளம் என்று கூறுகிறோம்.

பாரத தேசத்தில் ஆங்கிலேயர்ஆட்சியினால் ஏற்பட்ட கொள்ளை, சேதம், சீரழிவு நாசம், படுநாசம் அழிவு ஆகியவைகளைக் குறிப்பிடும் போது ஒரு ஐரோப்பிய அறிஞர் பேசுகிறார். ஆங்கிலேயர் இந்திய நாட்டில் நடத்திய சேதங்களும் கொள்ளையும் வேறு எந்த ஒரு நாட்டில் செய்திருந்தால் அந்த நாடே அழிந்திருக்கும். அதன் வளம் எத்தனை சேதம் ஏற்பட்டாலும் ஒரு மறை பெய்து விட்டால், பூமி செழித்து தேவையான செல்வங்களையும், வளத்தையும், உணவையும் இதர பொருள்களையும் அந்த பூமி கொடுத்துவிடும். அதனால் அந்த பூமி இத்தனை அழிவுகளையும் நாசங்களையும், கொடுமைகளையும் கொள்ளைகளையும் தாங்கி நின்றிருக்கிறது” என்று குறிப்பிடுகிறார்.

எனவே பாரதத்தில் இயற்கை வளமும் மனித வளமும், மனிதனுடைய அறிவு வளமும் அதிகம்.

பாரதத்தின் முதல் நிலை உற்பத்திச் செல்வம் அதற்கான வாய்ப்புகளும் ஏராளமாக உள்ளது. அதனால் சாகுபடி, கால்நடை வளர்ச்சி பெருக்கம், நமது நாட்டில் தட்டில்லாத செல்வத்தை மட்டில்லாத செல்வத்தைக் கொடுத்து வந்திருக்கிறது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் போதுமான உணவு இல்லாமல் பல கோடிக்கணக்கான மக்கள் செத்து மடிந்தார்கள். நாடு சுதந்திரம் பெற்ற போது உணவுப் பற்றாக்குறை இருந்தது. ஆனால் 50 ஆண்டுகளில், உணவுப்பொருள் தானியம், காய்கறி, பழங்கள், முட்டை, பால் முதலியவற்றில் முதலிடம் வகிக்கும் இவை ஏற்படுத்தியுள்ளோம்.

நமது நிலம், நீர்வளம், கடல் வளம், மலை வளம், வனவளம், மனித வளம் ஆகியவற்றை முறையாக நமது நாட்டின் பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றுடன் இணைத்து சீராகப் பயன்படுத்துவோமானால், நமது நாட்ட்ை போல் 10 நாடுகளுக்கு உணவு கொடுக்க முடியும். நீர்மின் நிலையங்களைப் பெருக்கி இந்தியாவைப் போல் 10 இந்தியாக்களுக்கு மின் விநியோகம் செய்ய முடியும் என்று நமது நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.

வற்றாத வளம்

நமது நிலவளம், நீர்வளம், கடல் வளம், மலை வளம், நமது மனித வளத்திற் அடுத்தபடியாக உலகிலேயே முதன்மையாக உள்ளது நமது கால்நடைவளம். மாடு, ஆடு, கோழி, குதிரை, கழுதை, ஒட்டகம், பன்றி முதலிய கால்நடை வளம் மிகவும் உயர்வானது. அபரிமிதமானது. சிறப்பு

119