பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதிக்கத்திற்கு எதிராக மடங்களின் ஆதிக்கத்திற்கு எதிராக மதச்சார்பற்ற அரசுகள் அமைய வேண்டும் என்னும் மறுமலர்ச்சி குரல் வலுவாக எழுந்தது.

பிரான்ஸ் நாட்டில் எழுச்சி பெற்ற இந்தப் பேரியக்கம், ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும், பிரஞ்சுக் காலனிகளிலும் பிரதிபதிபலித்தது. மகாகவி பாரதியார் பிரஞ்சுகாலன் ஆதிக்கத்தின் கீழ் இருந்த பிரஞ்சிந்தியாவின் தலைமையான பாண்டிச்சேரியில் வாழ்ந்து வந்தார். பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய விழிப்புணர்வு மகாகவி பாரதியார் உள்ளத்திலும் பிரதிபலித்தது.

மன்னர், மத நிறுவனம், மடநிறுவனம் ஆகியவற்றின் ஆதிக்கத்திற்கெதிரான விழிப்புணர்வு இயக்கம், சுதந்திரம் சமேத்துவம் சகோதரத்துவம் என்னும் சுதந்திர உணர்வும் எழுச்சியும் மிக்க மக்கள் போராட்டங்கள், பலவும் ஐரோப்பிய நாடுகளில் வெடித்தன. அவை பிரான்சில் உச்சிநிலை அடைந்து மக்களுடைய சிந்தனையில் பகுத்தறிவு இயக்கங்கள் வெகுவாகப் பிரதிபலித்தன. பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் பல சிந்தனையாளர் தோன்றி இலக்கியத்துறையிலும் மறுமலர்ச்சி எற்பட்டது. ஜெர்மன் தத்துவஞானக் கருத்துக்களும், பிரிட்டிஷ், பொருளாதார, வியாபாரக் கருத்துக்களும் செயல்பாடுகளும், பிரஞ்சு மனிதாபிமான மறுமலர்ச்சி விழிப்புணர்வுக் கருத்துக்களும் உலகின் பல நடுகளிலும் பரவின. அவை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், அதற்கு சற்று முன்பும், பாண்டிச்சேரியில் அரசியல் அகதியாக வாழ்ந்த நமது பாரதியாரின் சுதந்திர உள்ளத்தில் பதிந்தன. மகாகவி பாரதியின் சிந்தனைகளைப் பக்குள்படுத்துவதில் பிரஞ்சு மறுமலர்ச்சி சிந்தனைகளும் உதவின என்று கூறலாம். o

பிரிட்டிஷ் ஆட்சியின் கடுமையான நிபந்தனைக் கட்டுபாடுகளாலும் ஐரோப்பிய சுதந்திரக் கருத்துக்கள் இந்திய நாட்டிற்குள் பரவுவதும், இந்திய நாட்டைப் பற்றி உண்மையான செய்திகள் ஐரோப்பாவில் பரவுவதும் மிகவும் கடினமாக இருந்தது. அத்துடன் இந்தியாவுக்கு எதிராக பல பொய்யான கருத்துக்களும், பரப்பப்பட்டன. அதனால், ஐரோப்பிய நாடுகளில் இந்தியவைப் பற்றிப்பல தவறான கருத்துக்கள் பரவியிருந்தன.

ஐரோப்பிய நாடுகளில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் குறிப்பாக அந்த நூற்றாண்டின் பிற்பாதியில் உலகை உலுக்கும் பல நிகழ்ச்சிகள் பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் உலகை அதிர வைத்த பல நிகழ்ச்சிகளும், போராட்டங்களும் புரட்சிகளும் நிகழ்ந்தன.

பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் மற்றும் இதர மேற்கு ஐரோப்பிய நாடுகளில் புதிய தொழில் புரட்சிகள், மறுமலர்சி இயக்கங்கள், புதிய இலக்கியங்கள். தொழில் வியாபார வளர்ச்சகியைவுட்டிதோன்றி வளர்ந்தன.

தொழிலாளர் இயக்கங்கள் தோன்றி வளர்ந்தன.

1.59