பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரிட்டனில் தொழில் வளர்ச்சி வியாபாரம், காலனி ஆதிக்கம் செல்வப் பெருக்கம் வெகுவாக வளர்ச்சி பெற்றது. பிரிட்டிஷ் பார்லிமென்டில் ஆட்சி அதிகாரத்தில் பிரிட்டிஷ் தொழில் அதிபர்களின் ஆதிக்கம் அதிகரித்தது. பிரிட்டிஷ் மன்னரின் அதிகாரம் வெகுவாகக் குறைக்கப்பட்டு வந்தது. பார்லிமென்டின் நெசவாக்கு அதிகரித்தது.

பிரிட்டிஷ் தொழிற்சாலைகள் நவீன எந்திரத் தொழிற்சாலைகள் நவீன எந்திரக் தொழிற்சாலைகள் நூல் துணி ஆலைகள் முதலியவற்றில் பணியாற்றிக் கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் சேர்ந்து பொருங் கூட்டமாக பார்லிமென்டிற்குச் சென்று தங்களுடைய கோரிக்கை சாசனங்கள் சமர்பித்து அக்கோரிக்கைகளை நிறைவேற்றும்படி கிளர்ச்சிகள் நடத்தினர். அதற்கு சார்ட்டிஸ்ட் இயக்கம் என்று பெயர். அவர்கள் பார்லிமென்டில் சமர்ப்பித்து சார்ட்டரில் அதாவது (கோரிக்கை பட்டியல்) தொழிலாளர்களின் வாழ்க்கையில் அபிவிருந்தி காண்பதற்கான பல கோரிக்கைளும் அடங்கியிருந்தன.

கூலி உயர்வு, வேலை நேர நிர்ணயம், வாராந்திர விடுமுறை, இதர பொது விடுமுறை, பண்டிகை முதலிய சிறப்பு விடுமுறை, தொழிலாளர்கள் வேலை செய்யுமிடங்களில் ஒய்வு எடுக்கும் வசதிகள், சாப்பாட்டு அறைகள், உணவு விடுதி, தண்ணிர் வசதி, தங்குமிடம், பிரயாண வசதிகள், சுகாதார வசதிகள், வீட்டு வசதிகள், பெண்கள் பாதுகாப்பு, பிரசவ கால வசதிகள், குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகள் படிப்பு வசதிகள், சீருடைகள், இவ்வாறு வேலை நிலைமைகள் பற்றிய பல கோரிக்கைளும், இக்கோரிக்ப் பட்டியலில் சேரும் வாழ்க்கை வசதகிள் அதிகரிக்கும் போது, வாழ்க்கைத் தேவைகள் அதிகரிக்கும் போது, தொழிலாளர்களின் கோரிக்கைகளும் அதிகமாகும்.

இவ்வாறு பிரிட்டனில் தொடங்கிய ஆரம்ப கால எந்திரத் தொழிலாளர் (நவீன எந்திரத் தொழிலாளர்) இயக்கம் தீவிரமான இயக்கமாக வளர்ந்தது. ஆரம்பத்தில் சில நேரங்களில் இந்த சார்டிஸ்ட் இயக்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் மோதல்கள் ஏற்பட்டு, பல வன்முறைகளும் நிகழ்ந்திருக்கின்றன. இந்த சார்டிஸ்ட் பிரிட்டனிலும் வேறு சில நாடுகளிலும் பிரபலமடைந்தன.

பின்னர் தொழிலாளர் இயக்கங்கள் அரசியல் தன்மை பெற்று, பிரிட்டன் போன்ற நாடுகளில் லேபர் கட்சிகள் (தொழிலாளர்கட்சிகள்) தோன்றி ஆட்சி அதிகாரத்திற்கும் வந்திருக்கின்றன. ஆட்சி அதிகாரத்தில் பங்கும் வகித்துள்ளன. இக்காலத்தில் பல நாடுகளிலும் தொழிலாளர் இயக்கங்கள் அரசியல் பலம் பெற்று ஆட்சிப் பொறுப்புகளில் உள்ளன.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரான்ஸ் தேசத்தில் மன்னராட்சிக்கும் மத மட ஆதிக்கத்திற்கும் எதிராக மிகவும் பலமான ஆயுதப் போராட்டங்களாக சில நேரங்களில் கோரமான வடிவங்கள் எடுத்தும் நடைபெற்றிருக்கின்றன.

160