பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல மன்னர் பரம்பரையினரும், நிலப் பிரபுக்களும் அவர்களு ைப பதவிகளிலிருந்தும், பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டனர். மக்களு ைய ஜனநாயக இயக்கம் பல தடவைகளில் வன்முறை வடிவங்கள் எடுத்தன. அதையொட்டி பல மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் மக்களாட்சி இயக்கம் பரவியது.

பிரான்ஸ் நாட்டின் பல நகரங்களிலும் தொழிலாளர்களின் ஆயுதம் தாங்கிய போராட்டங்களும் கலவரங்களும் நடைபெற்றன. இவை பெரும்பாலும்- தொழில் முதலாளிகள், நிலப்பிரபுக்கள், மன்னராட்சியினர். மதம். மடம் ஆகிய நிறுவனங்களின் ஆதிக்கம் கொடுமைகளுக்கு எதிராக நடைபெற்ற மக்கள் கிளர்ச்சிகளாக இருந்தன.

ஒரு பக்கம் தொழிலாளர்கள் பொது மக்களுடைய ஆயுதம் தாங்கிய போராட்டங்கள், மறுபக்கம் சோஷலிஸம் போன்ற மனிதாபிமானக் கருத்துகளின் வெளிப்பாடுகள் ஆகியவை பிரெஞ்சு நாட்டைச் சூழ்ந்திருந்தன. ஜனநாயகக் கருத்துக்கள் அந்த நாட்டின் மண்ணில் ஆழமாக வேரூன்றியது.

மறுபக்கம் கத்தோலிக்க மதகுருக்களின் ஆதிக்கமும் மக்களுடைய வாழ்க்கையை பாதித்துக் கொண்டிருந்தது. விக்டர் ஹிகோ போன்ற மனிதாபிமானம் நிறைந்த எழுத்தாளர்களின் கதைகளும் நவீனங்களும் மக்களிடம் ஆழ்ந்த பதிவுகளை உண்டாக்கிக் கொண்டிருந்தன.

இந்த நேரத்தில் நவீன தொழிலாளர் இயக்கங்களும் போராட்டங்களும் பிரஞ்சு நாட்டில் உச்சத்தை அடைந்தன. 1871 ஆம் ஆண்டில் பாரீஸ் நகரில் மிகப்பெரிய தொழிலாளர் கிளர்ச்சி ஏற்பட்டது. பிரெஞ்சு நாட்டின் தலைநகரமான பாரீஸ் நகர தொழிலாளர்கள் ஆர்த்தெழுந்து ஆயுதம் தாங்கி தலைநகரைக் கைப்பற்றி ஒரு புதிய தொழிலாளர்ஆட்சியை அமைத்தார்கள். அந்த ஆட்சி பாரீஸ் கம்யூனி என்ற பெயர் பெற்றது. அந்த ஆட்சி ஒரு வார காலத்தில் அத்தனை மக்களுக்கும் சம உரிமையும் ஜனநாயக உரிமைகளும் பல த்ொழிலாளர் நலசட்டங்களும் நிறைவேற்றப்பட்டன. இந்த ஆட்சியைக் கண்ட, பிரெஞ்சு அரசும் பிரெஞ்சுமுதலாளிகளும் மத நிறுவனங்களும் குலை நடுங்கியது. இதர நாடுகளின் அரசுகளும் மதத் தலைவர்களும் நடுக்கம் கொண்டனர். பிரெஞ்சு அரசுப் படைகள் பாரீஸ் நகரை நோக்கிப் படையெடுத்தது. பாரீஸ் கம்யூனி கிளர்ச்சிரத்த வெள்ளத்தில் நசுக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பாரீஸ் தொழிலாளர்கள் பிரெஞ்சு ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள். சுட்டுப் பொசுக்கப்பட்டார்கள். நாட்ை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். பாரீஸ் கம்யூன் போராட்டத்தில் கலந்து கொண்ட பிரெஞ்சு தொழிலாளர் நாட்டை விட்டு ஒடி பல நாடுகளிலும் தலைமறைவாகத் தஞ்சம் புகுந்தார்கள்.

பாரிஸ் கம்யூன் தொழிலாளர்களின் இந்தப் போராட்டம் சாதாரண

16.1