பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூழ்கிவிட்டது.

தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் உபரி மதிப்பு என்பது இப்போது இல்லை உற்பத்தி மதிப்பெல்லாம் மொத்தப் புள்ளிவிவரங்களில் மங்கி விட்டது. பொதுத்துறைகள் பலவும் பொதுப் பொளுளாதாரத்தில் கலந்து விட்டது. தனியார் தொழில்களும் அவைகளின் லாபப்பங்கீடுகள் பொதுப் பொருளாதாரத்திலும் லாபப்பங்கீடுகளிலும் கலந்துவிட்டது. சில மிச்ச சொச்சங்களில் ஆங்காங்கு வேண்டுமானால் வெளிப்படலாம் அவையும் பொதுப்பொருளாதாரத்தில் மூழ்கி மங்கி வருகின்றன.

உலக மயமாக்கல், உலகவர்த்தகம் ஆகிய புதிய வடிவங்கள் தோன்றியிருக்கின்றன. அவைகளில் சில வளர்ச்சியடைந்த நாடுகள் ஆதிக்கம் செலுத்துவதற்கு முயற்சி எடுக்கின்றன. அவைகளைக் கண்டு பயந்து அந்த அமைப்புகளிலிருந்து விலகுவதைக் காட்டிலும் உள்ளிருந்து போராடி ஆதிக்கசக்திகளை முறியடிப்பது என்னும் கருத்தும் வலுப் பெற்று வருகிறது.

உலகப் பொருளாதாரத்தில் இந்தியா, சீனா, ரஷ்யா மற்றும் ஆசிய நாடுகள் அதிகமான அளவில் பங்குகொள்வது அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

வளர்ச்சியடைந்த நாடுகளுக்கிடையில் ஏற்படும் முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்வதற்கு மோதல் கொள்கைகளைக் காட்டிலும் இணக்கமான சமரஸ்க் கொள்கைகளையே கடைப்பிடிக்க விரும்புகின்றன. கடைப்பிடிக்க விரும்புகின்றன. சமாதானமான முறைகளில் முன்னேறவே பெரும் பாலான நாடுகள் முயலுகின்றன.

அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் ஆதிக்கத்திற்கு எதிராக ஜெர்மனியும் ஜப்பானும் சமநிலைப் படுத்துவதற்கும் முயலுகின்றன. அமெரிக்கா, பிரிட்டனில், பிரிட்டன் பழைய ஆதிக்க நிலை வீழ்ச்சி யடைந்து பலவிஷயங்களிலும் இதர நாடுகளுடன் சமரலம் செய்து கொள்ள விரும்புகிறது. அமெரிக்கப் பொருளாதாரம் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறது. அதன் பொருளாதாரம் ஆயுத உற்பத்தி விற்பனையை ஆதாராமாகக் கொண்டிருக்கிறது. இந்த நிலை அதிக நாள் ஓடாது. நுகர் பொருள் சந்தையில் ஜெர்மனி ஜப்பான் ஆதிக்கம் அதிகரித்துவருகிறது. பிரிட்டன் தனது பழமை நிலையிலிருந்து மீள முடியவில்லை.

இந்தியாவும் சீனாவும் உலகப் பொருளாதாரத்தில் தங்கள் பங்கை அதிகரித்துவருகிறது. அந்நாடுகளின் நிலை உலக அளவில் உயர்ந்து வருகிறது. இந்த நாடுகளின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதில் தொழிலாளர்களின் பங்கு அதிகரித்து வருகிறது தொழிலாளர் நலன்களின் சிந்தனை அதிகரித்து வருகிறது. --

இன்றைய உலகப் பொருளாதாரத்தில் விவசாய உற்பத்தி, விவசாய உற்பத்தியையும் உற்பத்தித் திறனையும் அதிகரித்தல், நிலம் நீர்ப்பாசனம்

184