பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயர்களில் தொழிலாளர்கட்சிகள் அமைந்துள்ளன.

ஆசிய நாடுகளில் இந்தோனேஷியாவில் ஒரு காலத்தில் வல்லமை மிகுந்த இந்தோனவிய கம்யூனிஸ்ட் கட்சி மறைந்து விட்டது. அது போல் மலேசியா, சிங்கப்பூர் பர்மா முதலிய நாடுகளிலும் மற்றும் பாகிஸ்தான் நாட்டிலும் கம்யூனிஸ்ட்கட்சி அழிந்துவிட்டது. ஒரு காலத்தில் வல்லமை மிக்க அரசியல் சக்தியாக பங்களாதேஷ் பகுதி இருந்த கம்யூனிஸ்ட் இயக்கம் மறைந்துவிட்டது, அராபிய நாடுகளில் இஸ்லாமிய தத்துவங்களின் முன்பாக கம்யூனிஸ் தத்துவம் மறைந்துவிட்டது.

1960ஆம் ஆண்டுகளில் உலகம் முழுவதிலும் பல நாடுகளிலும் மார்க்சீய சிந்தனை ஒரு வலுவான சிந்தனைப் பிரிவாகப் பரவியிருந்தது. மார்சீயம் ஒரு பாடப் பொருளாகப் பேசாத பல்கலைகழகம் உலகில் எங்குமில்லை. இன்று அது மறைந்துவிட்டது. இந்தியாவில் இன்று கூடசிலர் தான் ஒரு மார்க்சிய சிந்தனைவாதி என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். அவர்களிடம் மார்க்சியமும் இல்லை. சிந்தனையும் இல்லை வெறும் வாய்ப்பேச்சும் வீச்சு மட்டும் உள்ளது.

இன்று மார்க்ளியே சிந்தனை யென்பது மறைந்துவருகிறது. முன்னாள் சேவியத் யூனியன் நாடுகளிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் மார்க்சீயம் - லெனினியம் ஒருபாடமாக இருந்தது. அது நீக்கப்பட்டுவிட்டது.

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ் கட்சி பலவும் க்லைக்கப்பட்டுவிட்டன. வெவ்வேறு பெயர்களில் அங்கு தொழிலாளர் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. முன்னாள் கம்யூனிஸ்ட்கள் பலவேறு தொழிலாளர் கட்சிகளில் பணியாற்றி வருகிறார்கள். எஞ்சியுள்ளவர்கள் அங்குமிங்குமாக சிதறிக் கிடக்கிறார்கள். பெயரளவில் சில இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன.

காரல் மார்க்ஸின் அடிப்படைத் தத்துவங்கள் இன்று படிப்பாதில்லை - இயக்கவியல் பொருள்முதல்வாதம் ஒரு கருத்து வடிவம் என்னும் முறையில் மறைந்துவிட்டது. வரலாற்றியல் பொருள் முதல்வாதம் என்னும் கருத்தும் நடைமுறையில் இல்லை. அந்தந்த நாடுகளில் அம்வைகளின் இயல்புக்கேற்றவாறு மாற்றங்கள் கொண்டு செயல்படுகின்றன. உதாரணமாக அரசு பற்றி: , அரசாங்கம் என்பது ஒரு வர்க்கம் மற்றொருவர்க்கத்தை அடக்கியாளும் வன்முறைக்கருவி என்று கூறுகிறது மார்க்சிஸம் - லெனினிஸம். ஆனால், இன்று அரசுகள் என்பது வேறு வேறு கணங்களைப் பெற்று மக்கள் அதிகமாகத் தலையிடும் அல்லது பங்கேற்கும் அரசு அங்கங்களாக மாறிவரு கின்றன.

காரல்மார்க்ஸின் வர்க்கப் போராட்ட தத்துவம் பத்தொன்பதாம் நூற்றாண்டோடு மங்கிவிட்டது. இருபதாம் நூற்றாண்டில் வரலாற்றில்

183