பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1945 ஆம் ஆண்டில் இரண்டாவது உலகப் போரில் நேச நாடுகள் வெற்றி பெற்றன. நாஜி ஜெர்மனி, பாஸிஸ்ட், இத்தாலி மற்றும் ஜப்பான்சேர்ந்த அச்சு நாடுகள் தோல்வியடைந்தன. மிகப் பெரும் அளவில் முன்று கோடி பேருக்கு மேல் பலிதானம் கொடுத்து சோவியத் யூனியன் வெற்றி பெற்றது. ஜெர்மன் தலைநகரான பெர்லின் வரை சென்று சோவியத் படைகள் வெற்றிக் கொடியை நாட்டியது.

போர் முடிவில் நாஜி படைகலை சோவியத் விரட்டிச் சென்ற கிழக்கு ஐரோப்பியநாடுகளில் குறிப்பாக, போலந்து, செக்கோஸ்லோவேகியா, ஹங்கேரி, பல்கேரியா, ருமேனியா, அல்பேனியா, யுகோஸ்லோவியா முதலிய நாடுகளில் புதிய தொழிலாளர் அரசுகள் நிறுவப்பட்டன.

கிழக்கே, ஜப்பான் போரில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் சீனாவில் கம்யூனிஸ்ட் படைகள் சீன தேசியப் படைகளுக்கு எதிராக வேக போரியமாக முன்னேறி 1949 ஆம் ஆண்டில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தைைலமையில் ஆட்சி அமைந்தது. வட கொரியாவிலும் வடக்கு வியட்நாமிலும் கம்யூனிஸ்டுகள் தலைமையில் ஆட்சி அமைந்தது.

வியட்நாமில் தெற்கு வியட்நாமில் அமெரிக்கப் படைகள் தலையிட்டு ஆக்கிரமித்து தலையிட்டு போரை நடத்தியது. வீரமிக்க வியட்நாம் தொடர்ந்து தேச பக்தப் போரை நடத்தி 1972 ஆம் ஆண்டில் அமெரிக்க படைகளை விரட்டியடித்து, தெற்கு வியட்நாமை விடுவித்து வியட்நாமை ஒன்றுபடுத்தி வியட்நாம் முழுவதிலம் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் தொழிலாளர் ஆட்சி நடைபெற்று வருகிறது.

1956 ஆம் ஆண்டில் லத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கியூபாவில் கம்யூனிஸ்ட்டுகள் தலைமையில் தொழிலாளர் ஆட்சி நடைபெற்று வருகிறது.

1960 ஆண்டுகளில் உலக அளவில் உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பெரும்பிளவு ஏற்பட்டது. சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் இரு கூறாகக் பிரிந்தது.

1960 ஆம் ஆண்டில் உலகிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் 81 தேசங்களிலிருந்து குவிந்து ஒன்று கூடி பெரும் மாநாடு 29 நாட்கள் நடைபெற்றது. அந்த மாநாட்டின் அறிக்கையும் தீர்மானங்களும் அவைகளின் மை உலர்வதற்கு முன்பு வேறுபாடுகள் வெளிப்பட்டு விட்டன. சீனக்கம்யூனிஸ்ட் கட்சி நிலையெடுத்து தனி அறிக்கை விட்டு உலக அமைப்பிலிருந்து வெளியேறிவிட்டது.

இப்போது சோவியத் யூனியன் கலைந்த பின்னர், ஐரோப்பிய நாடுகளில் பல நாடுகளிலும் கம்யூனிஸ்டு கட்சிகளின் கலைக்கப்பட்டு வேறு வேறு

182