பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியாவின் சில பகுதிகளில் அமைப்பாக இருந்தது. அத்துடன் இந்தியாவிலிருந்த பிரிட்டிஷ் ஆட்சி பெயரளவில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியையும், கம்யூனிஸ்ட் நடவடிக்கைகளையும் தடைசெய்தது. ஆகையால் கம்யூனிஸ்ட் இயக்கம் என்பதும், இந்தியாவில் மிகவும் மெதுவாகத்தான் சென்று கொண்டிருந்தது என்று கூறலாம்.

தொழிலாளர் சங்க அமைப்பு என்பது மேற்கத்திய பாணியில் முதன்

    1. , . றகத மு. முதலில் சென்னையில் சென்னை தொழிலாளர் சங்கம் என்னும் பெயரில் அமைந்தது. -

1920 ஆம் ஆண்டில் இந்திய நாட்டில் சென்னை, பம்பாய், கொல்கத்தா, கான்பூர் முதலிய இடங்களில் உருவாகியிருந்த தொழிலாளர் சங்கங்கள் இணைக்கப்பட்ட அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் என்னும் அமைப்பு உருவாயிற்று. இந்த அகில இந்திய தொழிலாளர் சங்க காங்கிரசில் கம்யூனிஸ்டுகள் பலரும் வேலை செய்து செல்வாக்கு பெற்றார்கள்.

1939 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. அந்த யுத்தத்தை ஏகாதிபத்திய யுத்தம் என்று கூறி இந்திய கம்யூனிஸ்டுகள் யுத்த எதிர்ப்பு நிலை எடுத்தார்கள். 1941 ஆம் ஆண்டில் ஜெர்மன் நாஜி படைகள் சோவியத் யூனியன் மீது படையெடுத்தார்கள். சோவியத் யூனியன் அப்போது நேச நாடுகளின் பக்கம் உறுதியாக நின்று, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் முதலிய நாடுகளுடன் சேர்ந்து நேசநாடுகள் அமைப்பாகக் கூட்டணிசேர்ந்து இரண்டாவது உலகப் போரில் பாசிசம் நாஜிஸத்திற்கு எதிராக கடுமையாகப் போரில் குதித்தது.

சோவியத் யூனியன் யுத்தத்தில் ஈடுபட்ட போது, போரில் குணமாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று கணித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போரில் பாசிஸத்திற்கு எதிராக நேச நாடுகளுக்கு ஆதரவாக நிலை எடுத்து, இந்தியாவில் பிரிட்டிஷ் அரசின் யுத்த முயற்சிகளுக்கு ஆதரவு கொடுத்தது.

அப்போது இந்திய கம்யூனிஸ்டுகள் பெரும்பாலும் தேசிய காங்கிரசிற்குள் இருந்து பணியாற்றியிருந்தார்கள். 1942 ஆம் ஆண்டில் யுத்தத்தில் நமது அணுகும் முறைபற்றி கம்யூனிஸ்டுகளுக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

1942 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மீதிருந்த தடைநீக்கப்பட்டது. 1943ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் முதல் மகாநாடு கூடி புதிய தலைமை அமைப்புகளைத் தேர்ந்தெடுத்து வெளிப்படையான அரசியல் கட்சியாக முதல் முதல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி என்றும் பெயரில் செயல்படத் தொடங்கியது.

1943 ஆம் ஆண்டில் உலகப் போர் கடுமையாயிற்று. மூன்றாவது அகிலம் முறையாகச் செயல்பட முடியாமல் கலைக்கப்பட்டு விட்டது.

181