பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிக துன்பம் ஏற்பட்டு இருக்கின்றனவேயன்றி ஏழைகளின் கஷ்டம் குறையவில்லை.

ஏழைகளைக் கவனியாமல் இருப்பது பெரிய ஆபத்தாக முடியும்.

உலகத்துச் செல்வர் ஸகல ஜனங்களுக்கும் பொதுவாகிய பூமியைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு எடுத்துக் கொண்டு பெரும்பகுதியார் சோறின்றி

H. i.

மாளும்படி விடுகிறார்கள். ஏழைகளைக் காப்பாற்ற . என்று

அவர்களுடைய கர்மத்தினால் அவர்கள் ஏழையா

கேட்டால் ருக்கிறார்கள். அதற்கு நாங்களா பொறுப்பு? நாங்களென்ன ஏழைகளுக்குக் காவலாளிகளா? என்று கேட்கிறார்கள். உலகம் மாறுகிறது. ஏழைகளுக்கு நியாயம் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு கிராமத்திலும் பொருளாளிகள் ஒரு சபை கூடி அந்த கிராமத்திலுள்ள ஏழைகளின் கஷ்டங்களை நிவர்த்தி செய்ய யோசனைகள் பண்ணி நிறைவேற்ற வேண்டும். அன்பினால் உலகத்தின் துயரங்களை எளிதாக மாற்றிவிடலாம். அங்ஙனம் செய்யாமல் அஜாக்கிரதையாக இருந்தால் ஐரோப்பாவைப்போல் இங்கும் ஏழை செல்வர் என்ற பிரிவு பலமடைந்து விரோதம் முன்றி அங்கு ஜனக்கட்டு சிதறும் நிலைமையில் இருப்பது போல் இங்கும்ஜன சமூகம் சிதறி மஹத்தான விபத்துக்கள் நேரிட இடம் உண்டாகும். -

பொருளாளிகள் இடைவிடாத உழைப்பையும் அன்பையும் சமத்துவ நினைப்பையும் கைக் கொண்டால் உலகத்தில் அநியாயமாக உத்பாதங்கள் நேரிட்டு உலகம் அழியாமல் காப்பாற்ற முடியும் பராசக்தி மனுஷ்யஜாதியை அன்பினும் ஸ்மத்துவத்திலும் சேர்த்து நலம் செய்க...!

செல்வம் (2)

‘பணமில்லாதவன் பிணம்’ என்று பழமொழி சொல்களிது. இதன் கருத்துத்தான் திருவள்ளுவர் வேறொருவகையிலே பொருளில்லாக்க கிவ்வுகமில்லை என்று சொல்லிருக்கிறார்.

இந்த உலகத்திலுள்ள எல்லாத் துன்பங்களைக் காட்டிலும் வறுமைத் துன்பம் கொடியது. இவ்வுலகத்தில் எல்லாச் சிறுமைகளைக்காட்டிலும் ஏழ்மையே அதிகச் சிறுமையானது. “இன்மையின் இன்னாததில்’ என்றும், ‘இல்லானை இல்லாளும் வேண்டாள், மற்றீன்றெடுத்த தாய் வேண்டாள், சொல்லாதவன் வாயிற் சொல்’ என்றும் டு மமுடின்டினனோட்ர் சொல்லியிருக்கிறார்கள்.

இங்ஙனமே, ஏழ்மையின் நிகரற்ற இகழ்ச்சியையும் துன்பத்தையும் விளக்கு வனவாய்ப் பண்டைத் தமிழ் நூல்களிலும் காவியங்கள் முதலியனவற்றிலும் காணப்படும் வசனங்களையும் உதாரணங்களையும்,

199