பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சபையில் அங்கம் பெற்றது. இவ்வாறு உலக அரங்கில் ஐக்கிய நாட்டு சபை ஒரு செல்வாக்கு மிக்க சபையாக உலக சமாதானத்தை உறுதிப்படுத்தும் சபையாகபடிப்படியாக ஒரளவு செல்வாக்கு பெற்றுவந்தது.

சீனாவில் க ம்யூனிஸ்ட் ஆட்சி

சீனாவில் சியாங்காங்கூேடிக் தலைமையிலான..... சீனாவுக்கு கம்யூனிஸ்ட் படைகளுக்கும் தொடர்ந்து போர் நடந்து 1949-ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் சீனா வெற்றி பெற்று கம்யூனிஸ்டுகள் தலைமையிலான சீன ஜனநாயகக் குடியரசாக 1949-ஆம் ஆண்டில் பிரகடனம் செய்யப்பட்டது. தேசீய சீனப்படைகள் தோல்வி பார்மோஸா தீவிற்கு ஒடி அங்கு தனியாட்சி அமைத்துக் கொண்டது.

சீனா ஒரு பெரிய தேசம். மக்கள் தொகையில் உலகில் முதன்மையான நாடு. சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி ஏற்பட்டதானது; உலகின் பலாபலத்தில் ஒரு மாற்றத்தை உண்டாக்கிவிட்டது. -

சோவியத் யூனியன் கிழக்கு ஐரோப்பிய நாடுகள், சீனா, வடகொரியா, வடக்கு வியத்னாம் என்று சேர்ந்தாற் போல் உலகின் பெரிய நிலப்பரப்பில் தொழிலாளர் கட்சிகளின் ஆட்சி ஏற்பட்டுவிட்டது. சோஷலிஸ் நாடுகள் என்பது அரசியல் துறையிலும் பொருளாதாரத்துறையிலும் ஒரு உலக அமைப்பாக வளர்ச்சி பெற்றுவிட்டது.

உலகில் சுமார் 80 நாடுகளில் கம்யூனிஸ்டு கட்சிகள் அமைப்பு பூர்வமாக உருவாகி ஒரு உலக சக்தியாக உருவாகியிருந்தது, அது ஒரு பெரிய உலக அரசியல் சக்தியாக உலகில் இடம் பெற்றிருந்தது.

மறுபக்கம் அமெரிக்கா ஒரு வல்லமைமிக்க ஆயுதம் பலம் கொண்ட சக்தியாக வளர்ந்திருந்தது. கம்யூனிஸ்டு நாடுகளின் வளர்ச்சி தங்கள் வளர்ச்சிக்கும் நிலைபாட்டிற்கு அபாயத்தை விளைவிக்கும் என்னும் உலகின் பல நாடுகளுக்கிடையிலும் அச்சத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தது.

வடட் லாண்டிக் ஒப்பநாடுகள் தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த நாடுகள் என்று பலவித ராணுவ ஒப்பந்தங்களை தனது தலைமையில் அமைத்துக் கொண்டு அமெரிக்க ஐக்கிய நாடுகள் தங்கள் ராணுவ பலத்தின் மூலம் உலகை அச்சுறுத்திக் கொண்டிருப்பதாக சோவியத் யூனியன் சீன முதலிய நாடுகள் கருதின. அதற்காக வார்ஸா ஒப்பந்த நாடுகள் என்னும் ராணுவக்கூட்டமைப்பு சோவியத் யூனியன் தலைமை உருவாயிற்று. -

யூ-எஸ் தலைமையிலான அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகளும் சோவியத் யூனியன் தலைமையிலான வார்ஸ்ா ஒப்பந்த நாடுகளும் பரஸ்பரம் சந்தேகத்துடன் தங்கள் தங்கள் ஆயுத பலத்தையும் ராணுவ பலத்தையும் பெருக்கிக் கொண்டும் தயார் நிலையில் இருந்து கொண்டுமிருந்தனர்.

220