பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணப்படுகின்றன.

முதலாவது (ஐரோப்பியரைப் போல் நாடும்) படிப்பின் பரவுதலாலும் நகரத்தானுக்குரிய கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவதாலும் கைத்தொழில் வியாபாரம் சம்மந்தமான பலவித முயற்சிகளாலும் பாரத நாட்டை வலிமையுடைய நாடாகச் செய்ய வேண்டும். இவையெல்லாம் தேசக் கடமையின் முக்கிய அம்சங்கள் இவற்றைப் புறக்கணித்தால் நமது ஜீவனுக்கே ஆபத்து நேரிடும் வாழ்க்கையிலே ஜயமும் அவனவன் தன் தன் அவாவைத் திருப்தி செய்து கொள்ளும் வழியும் வேண்டிப் பாடுபட்டால் அதிலிருந்தே மேற்கூறிய ... தர்மத்திற்குத் தூண்டுதல் உண்டாகும். இரண்டாவது ஆத்ம தர்மம் கடினமாயிருக்கும் இன்பங்களை மாத்திரம் கருதாமல் மனுஷ்ய வாழ்க்கையின் அதியுன்னதமான நோக்கத்தை நாடி உழைத்தவர்கள் நமது நாட்டில் எக்காலத்திலும் மாறாமல் இருந்து வருகிறார்கள்.

‘வந்தே மாதரம் - இதுவே உயிரின் ஒலி. ஹிந்துஸ்தானத்தை வணங்குகிறேன். ஹிந்து தர்மத்தைப் போற்றுகிறேன். லோக நன்மைக்காக என்னை மறந்து என்னை இரை கொடுப்பேன்.

இதுதான் ஜீவசக்தியின் சாந்தி வசனம். இந்த தர்மமம் ஐரோப்பியருக்குத் தெரியாது. அதை நாம் ஐரோப்பியருக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்களுடைய முயற்சிகளை நாம் கற்றுக் கொண்டு பிறகுதான்.அவர்களுக்கு நாம் உபாத்யாயராகலாம்’ என்று எழுதுகிறார்.

  • ஆரிய ஸ்ம்பத்து பாரதி எழுதுகிறார். i.

லம்பத்து என்பது சம்ஸ்கிருதச் சொல் இதன் பொருள் செல்வம். ஆனால் இங்கு செல்வம் என்பது திரவயத்தையும் பூஸ்திதியை ஆடு, மாடுகளையும் மாத்திரமே குறிப்பிடுவதன்று, 1) அறிவுச் செல்வம், 2) ஒழுக்கச் செல்வம், 3) பொருட்செல்வம் ஆகிய மூன்றையும் குறிப்பிடும். ‘ஆரிய சம்பத்து’ என்பது ஹிந்துக்களினுடைய அதிவு வளர்ச்சி.

‘நமது வேதம், நமது சாஸ்திரம், நமது ஜனக்கட்டு நமது பாஷைகள், நமது கவிதை, நமது சிம்பரம், நமது சங்கீதம், நமது நாட்டியம், நமது தொழில் முறைகள், நமது கோபுரங்கள், நமது மண்டபங்கள். நமது குடிசைகள், இவையனைத்துக்கும் பொதுப் பெயர்.ஆர்ய சம்பத்து. காளிதாசன் செய்த சாகுந்தல நாடகம்- ஹிந்தி பாஷையிலே துளசிதாஸர் செய்திருக்கும் ராமாயணம், கம்ப ராமாயணன், சிலப்பதிகாரம், திருக்குறள், ஆண்டாள் திருமொழி. இவையனைத்திற்கும் பொதுப் பெயர்.ஆர்ய சம்பத்து. தஞ்சாவூர் கோயில், திருமலை நாயக்கர் மஹால், தியாகய்யர் கீர்த்தனங்கள், எல்லோராவிலுள்ள குகைக் கோவில் ஆக்ராவிலுள்ள தாஜ்மஹால் சரபசாஸ்திரியாரின் புல்லாங்குழல் இவையனைத்திற்கும் பொதுப் பெயர்

58