பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்திர வஸ் முதலிய மகான்களும் மேற்றிசையில் விஸ்தாரமான யாத்திரைகள் செய்து தம்முடைய அபார சக்திகளைக் காண்பித்த பின்னரே மேற்றிசை வாசிகளில் பலர் ‘அடா இந்த ஹிந்துக்கள் நாகரிகத்திலம் அறிவிலும் இவ்வளவு மேம்பட்டவர்களா என்று வியப்பெய்தினர்.

தவிரவும், மேற்கத்தியார் நம்மைக் குறைவாக நினைக்கிறார்கள் என்பதை அவ்விடத்துப் பத்திரிகைகள் மூலமாகவும் புஸ்தகங்களின் மூலமாகவும் தெரிந்து கொண்டவர்களால் நமது தேசத்துக்கல்வி பெருமையால் இந்தியாவின் உண்மையான ....சியை அறியாது நின்ற இங்கிலிஷ் படிப்பாளிகளாகிய நம்மவரில் பலரும் வெளிநாட்டாரின் எண்ணத்தையே உண்மையெனக் கருதி மயங்கிவிட்டனர். காலச்சக்கரத்தின் மாறுதலால் இந்நாட்டில் அறிவுத்துறைகள் பல வற்றிலும் மேற்படி இங்கிலிஷ் படிப்பாளிகளே தலைமை வகிக்கும்படி நேர்ந்துவிட்டதினின்றும் இந்தியா தனது மாண்பை முற்றிலும் மறந்து போய் அதோ கதியில் விழுந்து விடுமோ என்று அஞ்சக்கூடிய நிலைமை அநேக மாய் ஏற்படலாயிற்று.

இப்படிப்பட்ட பயங்கரமான சமயத்தில் சுவாமி விவேகானந்தர் முதலாயினோர்தம்முடைய ஞான பராக்கிராமத்தால் மேற்றிசைநாகடுகளில் திக் விஜயம் பண்ணி மீண்டனர். இதினின்றும் இங்குள்ள இங்கிலீஷ் படித்த சுதேச தூஷணக்காரர் தமது மடமை நீங்கி ஹிந்து நாகரிகத்தில் நம்பிக்கை செலுத்துவாராயினர்.

மேற்றிசையோர் எது சொன்னாலும் அதை வேதமாகக் கருதிவிடும் இயல்பு வாய்ந்த நம்மவர் முன்பு இந்தியாவை அந்த அந்நியர் பழித்துக் கொண்டிருந்த போது தாமும் பழித்தவாறே இந்தியாவை அவர்கள் புகழத் தொடங்கிய போது தாமும் சுதேசப் புகழ்ச்சி கூறலாயினர். விவேகானந்தர் முதலானவர்கள் ஐரோப்பியர் அமெரிக்கார்களால் போற்றப்படுவதன்முன்பு அம்மஹான்களை நம்மவர் கவனிக்கவேயில்லை. அப்பெரியோர் மேற்றிசையில் வெற்றி பெற்று மீண்ட மாத்திரத்தில் வர்களை நம்மவர் தெய்வத்துக் கொப்பாக எண்ணி வந்தனை வழிபாடுகள் செய்யத்தலைப்பட்டனர். இந்த விஷயத்தை நம்முடைய மாதர்கள் நன்றாக கவனித்தறிந்து கொள்ளுதல் நன்று.

அறிவின் வலிமையே வலிமை. அறிவினால் உயர்ந்தோர்களை மற்றோர் இழிவாக நினைப்பதும் அடிமைகளாக நடத்துவதும் ஸாத்தியப்படமாட்டா. அறிவின்மேன்மையால் வெளித்தேசங்களிலே உயர்ந்த கீர்த்தி மடைத்து மீள்வோரை அதன் பிறகு இந்த தேசத்தார் கட்டாயம் போற்றுவார்கள். சில ஹிந்து ஸ்திரீகள் வெளிநாடுகளுக்குச் சென்று உயர்ந்த கீர்த்தி சம்பாதித்துக் கொண்டு வருவார்களாயின் அதினின்றும் இங்குள்ள ஸ்திரிகளுக்கெல்லாம் மதிப்பு உயர்ந்துவிடும். இந்த விஷயத்தை ஏற்கனவே நம்முடைய மாதர் சிலர் அறிந்து வேலை செய்து வருகிறார்கள்.

66