பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 மகாத்மா காந்தி முதல் பெரோஸ் காந்தியை இந்திராவிற்கு சிறு வயதிலிருந்தே தெரியும்; இருவரும் நண்பர்கள். அப்போது பெரோஸ் காந்தி லண்டனில் ஒரு பள்ளியில் பொருளாதாரம் படித்து வந்தார். கமலா அத்தை உடல் சிகிச்சைக்காக ஜெர்மனி வந்திருப்பது அறிந்து அடிக்கடி ரயிலில் வந்து வேண்டிய உதவி செய்து விட்டுப் போவார், கமலா நேருவிற்கு பெரோஸ் காந்தியை மிகவும் பிடித்திருந்தது. பெரோஸ் காந்தி விடுதலைப் போரில் ஆர்வம் கொண்டவர். - அதேபோல் அவர் நேரு குடும்பத்தினர் மீதும் ஆழ்ந்த பற்றுக் கொண்டிருந்தார். தாய்க்கு உதவ அவர் வந்து போவதை இந்திராவும் விரும்பினார் என்றே சொல்ல வேண்டும். கமலாவின் உடல்நிலை மேலும் மோசமா கியது. நேருவிற்கு தந்தி கொடுக்கப்பட்டது. உடனே சிறையில் இருந்த அவரை உத்திர பிரதேச சர்க்கார் விடுதலை செய்து அனுப்பி வைத்தது. -- அவர் மனைவியைக் காண விமானத்தில் வந்து சேர்ந்தார். அப்போது பெரோஸ் காந்தியும் அங்கு இருந்தார்.