106 மகாத்மா காந்தி முதல் காரணம் பெரோஸ் காந்தி பார்ஸி மதத்தைச் சேர்ந்தவர் என்பது தான். தன் மகள் இந்திராவின் விருப்பத்தை நன்கு அறிந்த நேரு, எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாது அவர்களது திருமணத்தை நடத்தி வைத்தார். இந்திராவும் பெரோஸ் காந்தியும் தங்களது புதுக் குடித்தன வாழ்க்கையை லக்னோவில் ஆரம்பித்தனர். வெள்ளையனே வெளியேறு 1942 ஆகஸ்ட் 8-ம் தேதி இந்திராவும், பெரோஸ்காந்தியும் பம்பாயில் நடைபெற்ற சரித்திரப் புகழ் வாய்ந்த அகில இந்திய காங்கிரஸ் கூட்டத்திற்குச் சென்றிருந்தனர். அந்த மகா நாட்டில்தான் 'வெள்ளையனே வெளியேறு' தீர் மானம் நிறைவேறியது. எல்லாத் தலைவர்களும் கைது செய்யப் பட்டனர். விடியற்காலை. தந்தையைக் கைது செய்ய போலீஸ் வந்த போது, இந்திரா அவ ருடைய பெட்டி படுக்கைகளைக் கட்டிக் கொடுத்து அனுப்பி வைத்தார். ஆகஸ்ட் இயக்கத்தில் தீவிர பங்கு கொண்டவ ராதலால் பெரோஸ் காந்தி மீதும் ஒரு வாரண்ட் இருந்தது. பெரும்பாலான காங்கிரஸ்காரர்களைப்
பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/108
Appearance