பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ் காந்தி வரை 111 காங்கிரஸ் தலைவர்களாகப் பதவி வகித்து வந்துள்ளனர். இந்திரா காந்தி காங்கிரஸின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்ட போது, கேரளாவைத் தவிர மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் மந்திரி சபை களே ஆட்சியில் இருந்தன. இவருடைய ஆட்சிக் காலத்தில் கேரளாவில் ஜனாதிபதி ஆட்சி ஏற்பட்டது. பம்பாய் மாநிலம் மகாராஷ்டிரா, குஜராத் என இரு மாநிலங் களாகப் பிரிக்கப்பட்டன. * * சீனப் போர் தி பேத்திலிருந்து தலாய் லாமா இந்தியா ஒடி வந்தார். அது சீனப் போராக உருவெடுத்தது. நட்பு நாடான சீனாவின் ஆக்கிரமிப்பு நேருவின் மனதை வேதனையில் ஆழ்த்தியது. ஆயினும் இந்தியாவின் தன் மானத்தைக் காக்க சீனாவுடன் போரிட இந்தியா தயாராகி விட்டது. பெரோஸ் காந்தி மரணம் 1960-ல் இரண்டாவது முறையாக இதய வலி ஏற்பட்டு பெரோஸ் காந்தி இறந்தார். கணவரது பிரிவு இந்திரா காந்தியை பெரிதும் வருத்தியது. சிறிது காலம் பிரமை பிடித்தவர் போல் தனிமையில் வாடினார்.