பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ் காந்தி வரை 113 பாகிஸ்தானுடன் தாஷ்கண்ட் ஒப்பந்தத்திற்கு ரஷியா சென்ற லால்பகதூர் சாஸ்திரி ரஷியாவில் மாரடைப்பால் இறந்தார். இதனை அடுத்து, இந்திரா பிரதமர் 25-11-66 அன்று இந்திரா காந்தி பாரதப் பிரதமராகப் பொறுப் பேற்றார். 16 ஆண்டுகாலம் பிரதமர் பதவியை இந்திரா வகித்தார். இந்த இடைப்பட்ட காலத்தில் இந்திரா காந்தி நாட்டு மக்களுக்காக 20 அம்சத் திட்டம் போன்ற பல பொருளாதார வளர்ச்சித் திட்டங் களைத் தீட்டி ஏழை மக்களுக்கு எண்ணற்ற நன்மைகள் செய்திருக்கிறார். தேசிய உடமையாக்கியதன் மூலம்; வங்கிக் கதவுகளை ஏழை மக்களுக்குத் திறந்து விட்டார். மக்கள் அவரை மிகுந்த நன்றியோடும் மரியாதையோடும் ஏற்றுக் கொண்டிருந்த வேளை யில் 30-10-84 புதன்கிழமை காலை 9 மணிக்கு இந்திராகாந்தி அவருடைய இரண்டு சீக்கிய மெய்க் காவலர்களால் அவரது இல்லத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திய வானில் தொடர்ந்து ஒளிவீசிக் கொண்டிருந்த நம்பிக்கை நட்சத்திரம் மண்ணில் ரத்த வெள்ளத்தில் வீழ்ந்து விட்டது.